Rain | Yellow & Orange Alert (Photo Credit: Pixabay)

அக்டோபர் 15, சென்னை (Chennai): சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி தொடர்ந்து அது அந்தப் பகுதியில் நிலவி வருகிறது என்றும், இதனைத் தொடர்ந்து, வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து புதுவை, வடதமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரை அருகில் நிலை கொள்ளும். தற்கிடையே, தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று ஒரே இடத்தில் நிலைகொண்டுள்ளது.

இன்றைய வானிலை (Today Weather): இதனால் அக்.15 ம் தேதியான இன்று தமிழகத்‌தில்‌ பெரும்பாலான இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌கூடும்‌. திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, ஓரிரு இடங்களில்‌ அதி கனமழையும்‌, திருவள்ளூர்‌, இராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்‌, திருவண்ணாமலை, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்‌சி, கடலூர்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌, தஞ்சாவூர்‌ மாவட்டங்கள்‌, புதுச்சேரி பகுஇகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, வேலூர்‌, திருப்பத்தூர்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, திருச்சிராப்பள்ளி மற்றும்‌ புதுக்கோட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்யவாய்ப்புள்ளது. Chennai Corporation: சென்னை மக்களே! உங்கள் மண்டல கண்காணிப்பாளர் யார்?.. அவசர அழைப்பு எண்.. விபரம் இதோ.!

அலர்ட்: பெரம்பலூர், சேலம், தருமபுரி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகபட்டினம் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

நாளைய வானிலை (Tomorrow weather): இந்த தாழ்வு மையம் சென்னைக்கு அருகே நாளை மாலை நேரத்தில் வரலாம். நாளை மாலை நேரத்தில் சென்னைக்கு அருகே நின்று மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் சென்னைக்கு ரெட் அலர்ட் நாளை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: இன்று தமிழக கடலோரப்பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ குமரிக்கடல்‌, தெற்கு ஆந்‌திர கடலோரப்பகுதிகள்‌, தெற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ மத்தியமேற்கு மற்றும்‌ அதனை ஓட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌ என்பதால் மீனவர்கள் மேற்கூறிய நாட்களில் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.