வானிலை: இன்று முதல் அக். 6ம் தேதி வரை தமிழ்நாட்டில் கனமழை; மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.. விபரம் உள்ளே.!

வரும் 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பரவலான மாவட்டங்களில் கனமழைக்கான சூழல் தென்பட்டுள்ளது என்பது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tomorrow weather (Photo Credit: LatestLY)

அக்டோபர் 02, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பொறுத்தவரையில், தமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளுக்கான தினசரி நாளைய வானிலை அறிக்கை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்‌திற்கான வானிலை தொகுப்பில், தமிழகத்தில்‌ பொதுவாக ஓரிரு இடங்களில்‌ (தென்தமிழகத்தில்‌ ஒரு சில இடங்களிலும்‌, வடதமிழகத்துல்‌ ஓரிரு இடங்களிலும்‌) மழை பெய்துள்ளது. புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்‌தில்‌ திருப்பூர், மதுரை, திருப்பத்தூர், கரூர், கோயம்புத்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்‌ அதிகபட்ச வெப்பநிலை கரூர்‌ பரமத்தியில் 38.0 டிகிரி செல்‌சியஸ்‌ அளவும், குறைந்தபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 19.5 டிகிரி செல்சியஸ்‌ அளவும் பதிவாகியுள்ளது.

இன்றைய வானிலை (Today Weather Report Tamilnadu):

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும்‌ எச்சரிக்கையில், மாலத்‌தீவு மற்றும்‌ அதனை ஒட்டிய பகுதிகளின்‌ மேல்‌ ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்‌சி நிலவுகிறது. இதனால் இன்று (02.10.2024) தமிழகத்தில்‌ ஒருசில இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌கூடும்‌. கோயம்புத்தூர்‌ மாவட்டத்தின் மலைப்பகுதிகள்‌, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்‌, சேலம்‌, நாமக்கல்‌, கரூர்‌ மற்றும்‌ திருச்‌சிராப்பள்ளி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 5-Year-Old Boy Killed: பாலியல் தொல்லைக்கு உடன்பட மறுத்த 5 வயது சிறுவன் கொலை; அரசு அதிகாரி கைது.. காஞ்சிபுரத்தில் பகீர்.! 

நாளைய வானிலை (Tomorrow Weather):

நாளை (03.10.2024) தமிழகத்தில்‌ ஒருசில இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌கூடும்‌. ராமநாதபுரம்‌, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, கடலூர்‌, கள்ளக்குறிச்‌சி, அரியலூர்‌, பெரம்பலூர்‌, திருச்சராப்பள்ளி, திருவண்ணாமலை, திருப்பத்தூர்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

4ம் தேதி இங்கெல்லாம் மழை:

நாளை மறுநாள் (04.10.2024) தமிழகத்தில்‌ அநேக இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌கூடும்‌. புதுக்கோட்டை, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, கடலூர்‌, விழுப்புரம்‌, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்‌, ராணிப்பேட்டை, அரியலூர்‌, பெரம்பலூர்‌, கள்ளக்குறிச்சி, வேலூர்‌, திருவண்ணாமலை, திருப்பத்தூர்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

5ம் தேதியில் வானிலை நிலவரம் (Weather Report):

05.10.2024 அன்று தமிழகத்‌தில்‌ அநேக இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌கூடும்‌. புதுக்கோட்டை, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, கடலூர்‌, விழுப்புரம்‌, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்‌, கள்ளக்குறிச்‌சி, அரியலூர்‌, பெரம்பலூர்‌, திருச்‌சிராப்பள்ளி மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

6ம் தேதி முதல் 8ம் தேதி வரை வானிலை:

06.10.2024 அன்று தமிழகத்‌தில்‌ அநேக இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌ கூடும்‌. சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர்‌, இருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, கடலூர்‌, திருச்சிராப்பள்ளி, சேலம்‌, நாமக்கல்‌, ஈரோடு, நீலகிரி மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 07.10.2024 மற்றும்‌ 08.10.2024 தேதிகளில் தமிழகத்தில்‌ அநேக இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையில் வானிலை நிலவரம்:

அடுத்த 24 மணி நேரத்‌திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்‌சியஸை ஒட்டியும்‌, குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 செல்‌சியஸை ஒட்டியும்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 

02.10.2024 முதல் 04.10.2024 வரையில் மன்னார்‌ வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய குமரிக்கடல்‌, வடகிழக்கு மற்றும்‌ அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல்‌, மத்தியகிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்‌திலும்‌, இடையிடையே 55 இலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌ என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.