வானிலை: சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை; குளுகுளு சூழலால் மக்கள் மகிழ்ச்சி.!
இதனால் மக்கள் மகிழ்ச்சியான குளுகுளு தருணத்தை நள்ளிரவு முதல் அனுபவித்து வந்தனர்.
செப்டம்பர் 24, நுங்கம்பாக்கம் (Chennai News): மத்திய வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதால், வரும் 2 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பரவலாக மழையை எதிர்பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று மாலை முதலாக பல்வேறு மாவட்டங்களில் திடீர் மழையும் பெய்தது. இந்நிலையில், சென்னையில் உள்ள புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் திடீர் கனமழை பெய்து வருகிறது. வானிலை: வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. மழைக்கு சாதகமான சூழல்; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
3 பகுதிகளில் கனமழை:
இதனால் நகரின் பல பகுதிகளில் மக்களுக்கு குளுகுளு சூழ்நிலை உண்டாகி மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு முதலாக திடீரென மழை மேகங்கள் நகரை சூழ்ந்துகொண்ட நிலையில், மழையால் வெப்பம் தணிந்து மக்களுக்கு சூழல் உண்டாகியது. குறிப்பாக மணலி, மதுரவாயல், வானகரம் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்துள்ளது. வளசரவாக்கம், அம்பத்தூர், கோடம்பாக்கம், கொளத்தூர், புழல், திருவொற்றியூர், எம்.ஜி.ஆர் நகர், நுங்கம்பாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, அண்ணா பல்கலைக்கழகம், அடையார், தண்டையார்பேட்டை, மீனம்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் பரவலான மழை பெய்தது.