வானிலை: அடுத்த 3 நாட்களுக்கு பல மாவட்டங்களில் கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. முழு விபரம் இதோ.!
அதன் முழு விபரத்தை தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.
செப்டம்பர் 27, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட மாற்றத்தை பொறுத்தமட்டில், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை (Tamilnadu Weather Report) நிலவியுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கள்ளக்குறிச்சி, நத்தம், அரியலூர், மணலூர்பேட்டை, கோயம்புத்தூர், திருக்கோவிலூர், அவிநாசி, விழுப்புரம், சேலம், கடலூர், சங்கராபுரம், சின்னக்கல்லார், தியாகதுருகம், கலசப்பாக்கம், கீழ்பெண்ணாத்தூர், நீலகிரி, ரிஷிவந்தியம், சிவகங்கை, மணிமுத்தாறு அணை ஆகிய இடங்களில் மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மதுரை விமான நிலையத்தில் அதிகபட்சமாக 38.6 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக ஈரோட்டில் 19.6 டிகிரி செல்சியசும் பதிவாகியுள்ளது.
இன்று 7 மாவட்டங்களில் கனமழை:
அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை பொறுத்தவரையில், உள் தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் 27ஆம் தேதியான இன்று வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை 20 மாவட்டங்களில் கனமழை:
28ஆம் தேதியில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. Madras High Court: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் ஸ்ரீராம் கல்பாத்தி இராஜேந்திரன்.!
நாளை மறுநாள் 14 மாவட்டங்களில் கனமழை:
29ஆம் தேதியை பொறுத்தவரையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தலைநகரில் வானிலை நிலவரம்:
30ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம். தலைநகர் சென்னையை பொறுத்தவரையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கான வானிலை அறிவிப்பில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம். குறைந்தபட்ச பின்னாலையாக 26 டிகிரி செல்சியசும், அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியசும் பதிவாகலாம்.
அரபிக்கடல் & வங்கக்கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு எச்சரிக்கை:
மீனவர்களுக்கான எச்சரிக்கையில் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு 27 ஆம் தேதி முதல் 03ம் தேதி வரை மன்னார்வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதி, அதனை ஒட்டிய குமரிக்கடல், வங்கக்கடலின் மத்திய தெற்கு பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும், இங்கு சூறாவளிக்காற்று மணிக்கு 35 கிலோமீட்டர் வேகம் முதல் 45 கிலோமீட்டர் வேகம் வரை வீசலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அரபிக்கடல் பகுதிகளில் 27ஆம் தேதி முதல் ஒன்றாம் தேதி வரை தென்மேற்கு அரபிக் கடல், தென்மேற்கு அரபிக் கடலின் மேற்கு பகுதிகள், அதனை ஒட்டிய மத்திய மேற்கு அரபிக் கடல், கர்நாடக-கேரள கடலோரப்பகுதி, லட்சத்தீவு கடலோர பகுதி ஆகிய இடங்களில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 கிலோமீட்டர் வேகம் முதல் 55 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்பதால், அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவுறுத்தப்படுகிறது.