செப்டம்பர் 27, சென்னை (Chennai News): சென்னை உயர்நீதிமன்ற (Chennai High Court) தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் விஜயகுமார், கடந்த மே மாதம் 23ம் தேதி பணிஓய்வு பெற்றிருந்தார். இதனால் உயர்நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதியாக, மூத்த நீதிபதிகளில் ஒருவரான ஆர். மகாதேவன் நியமனம் செய்யப்பட்டார். இதனிடையே, நீதிபதி மகாதேவன் உச்சநீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டு, அவர் தனது பதவியையும் ஏற்றுக்கொண்டார். Senthil Balaji: அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட நேரில் ஆஜரான செந்தில் பாலாஜி.!
நீதியரசர் ஸ்ரீராம் கல்பாத்தி (Justice Sriram Kalpathi Rajendran) ராஜேந்திரன் பதவியேற்பு:
இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் (Madras High Cout) பொறுப்புத் தலைமை நீதிபதியாக டி. கிருஷ்ணகுமார் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்புக்கு, மும்பை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி ஸ்ரீராம் கல்பாத்தி ராஜேந்திரனை பரிந்துரை செய்யப்பட்டார். இதனை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து, நீதிபதி ஸ்ரீராம் இன்று தனது பதவியை ஏற்றுக்கொண்டார்.
யார் இந்த ஸ்ரீராம்?
நீதிபதி கே.ஆர் ஸ்ரீராமுக்கு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் தமிழக அரசின் அதிகாரிகளும், அமைச்சர்களும் கலந்துகொண்டனர். கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஸ்ரீராம், மும்பை பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று, பின் லண்டனிலும் மேற்படிப்பு மேற்கொண்டார். கடந்த 1986ம் ஆண்டு முதல் வழக்கறிஞர் பணியை தொடங்கிய ஸ்ரீராம், இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஆளுநர் ஆர்.என். ரவி நீதிபதி ஸ்ரீராம் கல்பாத்தி ராஜேந்திரனுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்:
மாண்புமிகு ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்கள், சென்னை ராஜ் பவனில் மாண்புமிகு நீதிபதி ஸ்ரீராம் கல்பாத்தி ராஜேந்திரன் அவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். pic.twitter.com/cMBT1ESApd
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) September 27, 2024