Rain Alert: அடுத்த 3 மணிநேரத்திற்கு 13 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
தமிழகத்தை நோக்கி வரும் ஃபெங்கால் புயலின் தாக்கம் காரணமாக, இன்று வடகடலோரம் உட்பட பல தமிழக மாவட்டங்களில் மழை முன்னெச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 27, நுங்கம்பாக்கம் (Chennai News): தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, விரைவில் புயலாக வலுப்பெற்று, தமிழகத்தில் கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. Fengal Cyclone: ஃபெங்கால் புயல் எதிரொலி; கடலூர், நாகை உட்பட 9 துறைமுகங்களில் 3ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.!
அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை வாய்ப்பு:
இந்நிலையில், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள், காரைக்காலில் அடுத்த 3 மணிநேரத்திற்கு, மாலை 04:00 மணி வரையில் இடி-மின்னலுடன் கூடிய கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிதமான இடி-மின்னலுடன் கூடிய மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று மாலை 04:00 மணி வரை மழைக்கான வாய்ப்புள்ள இடங்கள்: