Cyclone Warning Flags in Nagapattinam Harbor (Photo Credit: @Sunnewstamil X)

நவம்பர் 27, கடலூர் (Cuddalore News): தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவ.26, 2024 இன்று காலை 08.30 மணியளவில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் வடக்கு – வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது என வானிலை (Weather) ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஃபெங்கால் புயல்:

தற்போதைய நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகையில் இருந்து தெற்கே-தென்கிழக்கே 590 கிமீ தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 710 கிமீ தெற்கே-தென்கிழக்கே தொலைவிலும், சென்னைக்கு தென்-தென்கிழக்கே 800 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் தீவிரமடைந்து நவம்பர் 27-ம் தேதி புயலாக மாறும். இந்த புயலுக்கு ஃபெங்கால் (Fengal Puyal) என பெயரிடப்பட்டுள்ளது. இப்புயலுக்கான (Fengal Cyclone) பெயரை சவூதி அரேபியா சூட்டி இருக்கிறது. Tamil Nadu CM Stalin: ஃபெங்கால் புயல் எதிரொலி.. முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை..! 

புயல் எச்சரிக்கை கூண்டு (Warning Flags in Harbors):

இந்நிலையில், சென்னை, கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி உட்பட 9 துறைமுகங்களில், 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டுகள் திடீர் காற்றுடன் பெய்யும் மழையால் துறைமுகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு அச்சுறுத்தல் உண்டாகும் நிலையை உணர்த்தும் நடவடிக்கையை உணர்த்த ஏற்றப்படுகிறது.

தேசிய மீட்புப்படை விரைவு:

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு 30 பேர் கொண்ட தேசிய மீட்புப்படை குழுவினர் மீட்புப்பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், இரவு சுமார் 08:30 மணியளவில் புயலாக வலுப்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வங்கக்கடலோரம் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

புயலின் நகர்வுகளை துல்லியமாக Windy.com ல் காணுங்கள்..