Big Breaking: மாடு மேய்த்துக்கொண்டிருந்த பெண்கள் மீது கார் மோதி பயங்கரம்.. 4 பெண்கள் பரிதாப பலி.!

அதிவேக நெடுஞ்சாலையில் மாடுகளை மேய்த்தபடி, சாலையை கடந்த 4 பெண்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். ஒருவர் உயிருக்கு போராடுகிறார்.

Mamallapuram Accident on 27-Nov-2024 (Photo Credit: @Sriramrpckanna1 X)

நவம்பர் 27, மாமல்லபுரம் (Chengalpattu News): செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம், பழைய மகாபலிபுரம் (OMR Road Accident) சாலையில், இன்று மாடு மேய்த்துக்கொண்டு இருந்த 5 பெண்கள், சாலையை கடந்துகொண்டு இருந்தனர். இவர்கள் அங்குள்ள பண்டிதமேடு கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அச்சமயம், அவ்வழியாக அதிவேகமாக கார் ஒன்று வந்தது.

அதிவேகத்தில் சோகம்:

இந்த காரின் ஓட்டுநர் பெண்கள் சாலையை கடப்பதை பார்த்த நிலையில், அவரால் வாகனத்தை கட்டுப்படுத்த இயலவில்லை. இதனால் பெண்களின் மீது வாகனம் மோதியது. இந்த விபத்தில் பெண்கள் சாலையில் நாலாபுறமும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். Rain Alert: அடுத்த 3 மணிநேரத்திற்கு 13 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.! 

நால்வர் நிகழ்விடத்திலேயே பலி:

விபத்தை கண்டு அதிர்ந்துபோன பொதுமக்கள், அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 4 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒருவர் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை எப்ற்று வருகிறார்.

காவல்துறை விசாரணை:

விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், விபத்தில் உயிரிழந்த பெண்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக உயிரிழந்தவர்கள் விஜயா, யசோதா, லோகாம்பாள், கௌரி, ஆனந்தம்மாள் என்பது தெரியவந்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனரை மக்கள் தாக்கும் காட்சி:

மேற்படி களநிலவரங்கள் சேகரிக்கப்படுகிறது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement