Amazon Delivery Scam: லேப்டாப் ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் வந்த கடப்பா கல்.. கைவிரித்த அமேசான்.. சென்னை இளைஞர் குமுறல்.!

வேலை காரணமாக மாதம் இஎம்ஐ செலுத்தும் தவணை முறையில் லேப்டாப் ஆர்டர் செய்தவருக்கு, அமேசான் டெலிவரி செய்தபின்னர் அதிர்ச்சி காத்திருந்தது குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. ஆன்லைன் ஆர்டர் மோடி செயல்கள் தொடருவது இன்று வரை தொடர்கதையாகுவது கவனத்தை பெற்றுள்ளது.

Asus Laptop | Scam Amazon Logo (Photo Credit: @ThanthiTV X / Pixabay)

நவம்பர் 30, சென்னை (Chennai News): வீட்டில் இருந்தபடி இன்றளவில் எலக்ட்ரானிக் பொருட்கள் முதல், வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வரை பணம் செலுத்தி (Pay Now) அல்லது பொருளை வாங்கும்போது பணம் கொடுக்கும் வசதி (Cash on Delivery) மூலமாக நாம் பெற்று வருகிறோம். இவற்றில் அமேசான், பிளிப்கார்ட், நைகா போன்ற பல்வேறு தளங்களில் ஆர்டர் செய்யப்படும் பொருட்கள், அவர்களின் சொந்த டெலிவரி ஊழியர்களால் வீட்டு வாசலில் டெலிவரி செய்யபடுகிறது. இவ்வாறாக ஆர்டர் செய்யப்படும் பொருட்களில், சில நேரம் முறைகேடுகளும் நடைபெறுகின்றன. Geyser Explodes: திருமணமான 5 நாட்களில் புதுமணப்பெண்ணுக்கு இப்படியா நடக்கணும்? பாத்ரூமில் பரிதாபமாக பறிபோன உயிர்.! 

லேப்டாப் ஆர்டர் செய்தவருக்கு அதிர்ச்சி:

இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அமேசான் (Amazon Online Order) இணையத்தளம் வாயிலாக கடந்த நவ.16 அன்று ஆஷஸ் (Asus Laptop) நிறுவனத்தின் லேப்டாப் ஆர்டர் செய்துள்ளார். ரூ.65 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப்பை, மாத தவணை மூலமாக அவர் ஆர்டர் செய்திருக்கிறார். நவ.18 அன்று பொருள் டெலிவரி செய்யப்பட்ட நிலையில், அதனை எடுத்து வந்து பார்த்தபோது, அதில் கடப்பா கல் வைக்கப்பட்டு இருந்தது அம்பலமானது. 14-Year-Old Boy Dies: 14 வயது சிறுவனுக்கு, 14வது மாடியில் காத்திருந்த எமன்; பால்கனி விளையாட்டு விபரீதத்தில் முடிந்த சோகம்.! 

காவல் நிலையத்தில் புகார்:

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வாடிக்கையாளர் மையத்திற்கு தொடர்பு கொண்டு பேசியபோது, அவர்கள் 24 மணிநேரத்தில் பிரச்சனையை தீர்த்து வைப்பதாக கூறி இருக்கின்றனர். பின் 4 நாட்கள் என நவ.28 வரை 2 முறையாக நேரம் கேட்கப்பட்டது. நாட்களை கடத்திய அமேசான் நிர்வாகம், எங்களின் தரப்பில் எந்த பிரச்சனையும் இல்லை, பொருள் உங்களின் பொறுப்பே. உங்களுக்கு பணம் திரும்ப வழங்கப்படாது என கூறி கைவிரித்து இருக்கிறது. இந்த விசயம் இளைஞருக்கு அதிருப்தியை ஏற்படுத்தவே, அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அமேசான் அதிகாரிகள் சரிவர பதில் அளிக்க மறுப்பு தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது.

இளைஞர் அமேசானில் ஆர்டர் செய்து தான் ஏமாற்றப்பட்டது குறித்து விளக்கம் காணொளி:

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement