Anna University: அண்ணா பல்கலை., மாணவி பலாத்கார விவகாரம்; இன்று ஆளுநர் ஆர்.என் நேரில் ஆய்வு.!

பிரியாணி கடை உரிமையாளர், 19 வயது கல்லூரி மாணவியை மிரட்டி வன்கொடுமை செய்த விவகாரத்தில், ஆளுநர் ஆர்.என் ரவி இன்று அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்கிறார்.

Anna University | RN Ravi (Photo Credit: @DDTamilNews / @rajbhavan_tn X)

டிசம்பர் 28, கிண்டி (Chennai News): சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University), கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி, மெக்கானிக்கல் துறையில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். இவர் தன்னுடன் பயின்று வந்த நான்காம் ஆண்டு மாணவரை காதலித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காதல் ஜோடி இரவு உணவை சாப்பிட்டுவிட்டு, 07:30 மணிக்கு மேல் தனிமையான பகுதிக்கு சென்று சந்தித்துக்கொண்டுள்ளது.

சாலையோர பிரியாணி கடை உரிமையாளரான, சரித்திர பதிவேடு குற்றவாளி கைது:

அப்போது காதல் ஜோடியை நோட்டமிட்ட மர்ம நபர், இருவரையும் வீடியோ எடுத்து வைத்து மிரட்டியது. காதலனை தாக்கி துரத்திவிட்டு, இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபர், தான் அழைக்கும்போதெல்லாம் நீ வரவேண்டும். போனில் பேசிய சாறுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என மிரட்டி அனுப்பி வைத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரில், திமுக கட்சி நிர்வாகி என பாஜக தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் சாலையோர பிரியாணி கடை உரிமையாளர் ஞானசேகரன் (வயது 37) என்பவர் கைது செய்யப்பட்டார். DMDK: சென்னையில் பெரும் பரபரப்பு.. சாலை மறியல்., விஜயகாந்த் நினைவு தினத்தில் தடையை மீறி பேரணி.! 

பல்கலை., நிர்வாகமே பொறுப்பு;

இவரின் மீது அடிதடி உட்பட 17 க்கும் மேற்பட்ட வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் இருந்து, சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்ததும் விசாரணையில் அம்பலமானது. விசாரணையைத் தொடர்ந்து ஞானசேகரன் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஞானசேகரன் தொடர்பாக பல்வேறு பரபரப்பு தகவலும் வெளியாகி வரும் நிலையில், விசாரணையும் தீவிரமடைந்துள்ளது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு பாஜக, அதிமுக உட்பட அரசியல் கட்சிகள் போராட்டத்தையும் முன்னெடுத்துள்ளது. அரசின் சார்பில் அமைச்சர்கள் அளித்த பேட்டியில், அண்ணா பல்கலை., வேந்தர் அனுமதி இன்றி காவல்துறைகூட வளாகத்திற்குள் நுழைய இயலாது என்பதால், மாணவிக்கு நடந்த பிரச்சனைக்கு அவரே பொறுப்பு என கூறப்பட்டது.

ஆளுநர் நேரில் ஆய்வு:

இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பலாத்கார விவகாரம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்கிறார். இன்று மதியம் 12:30 மணியளவில் ஆளுநர் ஆய்வு நடக்கவிருப்பதால், அதற்கேற்ப முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆய்வுக்கு பின்னர் ஆளுநர் மாளிகை சார்பில் மாணவி பலாத்கார விவகாரம் தொடர்பாக அறிக்கை அல்லது செய்தியாளர்கள் சந்திப்பு நடக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.