டிசம்பர் 28, கோயம்பேடு (Chennai News): தேமுதிக தலைவர் விஜயகாந்த், கடந்த 2023 டிசம்பர் 28 அன்று உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். இவரின் மறைவு தமிழக மக்களை கடந்த ஆண்டு பெரும் துயரத்தில் ஆழ்த்தி இருந்தது. இன்றுடன் விஜயகாந்த் மறைந்து ஓராண்டு ஆகியுள்ள நிலையில், தேமுதிக சார்பில் நினைவு தின பேரணிக்கு அனுமதி கேட்கப்பட்டு இருந்தது. அந்த அனுமதி காவல்துறையினர் சார்பில் மறுக்கப்பட்டு இருந்த நிலையில், பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பலனில்லை. Parangimalai Murder Case: பரங்கிமலை கல்லூரி மாணவி கொலை விவகாரம்; சதிஷ் குற்றவாளி என அறிவிப்பு..!
போக்குவரத்து நெரிசல் - சாலை மறியல்:
இந்நிலையில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நினைவுதினத்தையொட்டி, நினைவுதின பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால் கோயம்பேடு சாலையில் தேமுதிக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கானோர் குவிந்து இருப்பதால், கூடுதல் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு தேமுதிகவினர் விரட்டியடிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. கட்சியின் தலைமை அலுவலகம் கோயம்பேடு பிரதான பகுதியில் அமைந்துள்ள காரணத்தால், பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தடையை மீறி பேரணி:
முன்னதாக தேமுதிக தலைமை நிர்வாகி சுதீஷ் காவல்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோதும், அது தோல்வியுற்றது. தேமுதிக சார்பில் பேரணிக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. இன்று காலை வழக்கம்போல பேரணியை தொடங்கிய நிலையில், காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து இருந்தனர். அதனை நகர்த்தி விஜயகாந்தின் இளையமகன் சண்முக பாண்டியன் முன்னேறி சென்றதால், தொண்டர்களும் அவரின் பின்னால் வந்ததால் பரபரப்பு உண்டாகியது. பிரேமலதா விஜயகாந்தும் நிகழ்விடத்தில் தடையை மீறி பேரணியில் ஈடுபட்டு இருக்கிறார்.
நா.த.க தலைவர் சீமான், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் காலையிலேயே கேப்டனின் நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்தினர்.