DMDK General Secretary: தேமுதிக கட்சியில் அதிரடி திருப்பம்... பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம்..!

தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில், பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

DMDK Meeting (Photo Credit: @Veaswarrr X)

டிசம்பர் 14, சென்னை (Chennai): தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் மாநாடு சென்னையை அடுத்துள்ள திருவேற்காட்டில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் விஜயகாந்த் பங்கு பெற்றார். 20 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், திங்கட்கிழமை தான் டிஸ்சார்ஜ் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்தை பார்த்தவுடன் தொண்டர்கள் அனைவரும் பொதுக்குழு கூட்டத்தில் கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர். இக்கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர் பார்த்தசாரதி, மாநில, மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். Security in Parliament: நாடாளுமன்ற தாக்குதல் எதிரொலி: நாடாளுமன்றத்தில் புதிய கட்டுப்பாடுகள்..!

பொதுச் செயலாளரான பிரேமலதா: இந்த பொதுக்குழுவில் மொத்தம் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் (Premalatha Vijayakanth) நியமனம் செய்யப்பட்டார். நியமனம் செய்யப்பட்ட உடனே விஜயகாந்தின் காலில் விழுந்து, ஆசிர் பெற்றார். இதனை அடுத்து பிரேமலதாவின் கையை தூக்கி தொண்டர்களிடம் காண்பித்தார் விஜயகாந்த். மேலும், ‘வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் தலைமையில் கழக தொண்டர்கள் அனைவரும் ஒருமையுடனும், முழுவேகத்துடனும் பணியாற்றிட இந்த பொதுக்குழு உறுதிகொள்கிறது. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி அமைப்பது பற்றியும், தேர்தல் யுத்திகளை வழிவகுக்கவும் தேமுதிக நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு முழு அதிகாரம் வழங்கி தேமுதிக பொதுக்குழு இத்தீர்மானத்தை நிறைவேற்றுகிறது.’ என்று பொதுக்குழு கூட்டத்தில் முடிவெடுத்துள்ளனர்.