டிசம்பர் 14, டெல்லி (Delhi): இந்திய பாராளுமன்றத்தில் (Parliament) மக்களவையில் நேற்று அலுவல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து திடீரென இரண்டு பேர் கூச்சலிட்டுக் கொண்டே அத்துமீறி உறுப்பினர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு வந்தனர். அவர்கள் சபாநாயகரை நோக்கி ஓடி வந்த அவர்கள், திடீரென்று புகை குண்டுகளை வீசினர். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. இருப்பினும் அத்துமீறிய அந்த இருவரையும் சில உறுப்பினர்கள் பிடித்து பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. Joe Biden Face Inquiry: அதிபர் ஜோ பைடனுக்கு எதிரான விசாரணைக்கு ஒப்புதல் வழங்கியது அமெரிக்க பாராளுமன்றம்: தொடரப்போகும் விசாரணை.!
நாடாளுமன்றத்தில் புதிய கட்டுப்பாடுகள்: நாடாளுமன்றத்தின் புதிய கட்டுப்பாட்டின் கீழ், இனி நாடாளுமன்றத்தின் பிரதான நுழைவு வாயிலில் இனி எம்.பி.க்களுக்கு மட்டுமே உள்ளே வர அனுமதி அளிக்கப்படும், எம்.பி.,களின் உதவியாளர்கள் யாரும் பிரதான நுழைவு வாயிலில் வர அனுமதியில்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையங்களில் நுழைவு வாயிலில் விமான பயணிகளின் உடமைகளை சோதனையிடும் ஸ்கேன் மிஷன் போன்று பார்லிமென்ட் நுழைவு வாயிலில் பொருத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இனி பார்வையாளர்கள் மாடத்தில் கண்ணாடி தடுப்புகள் பொருத்தப்படும் என்று கூறியுள்ளனர். இனி நாடாளுமன்றத்திற்கு அலுவலர்கள், பத்திரிக்கையாளர்கள் தனி பாதையில் வர வேண்டும். பார்வையாளர்கள் கால தாமத்துடன் வந்தால் அவர்கள் அதற்கான தனி பாதை வழியாக வரவேண்டும். மேலும் கூடுதலாக பாதுகாவலர்கள் நியமிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.