BigBreaking: தண்டவாளத்தில் திடீர் விரிசல்.. 1000 பேரின் உயிர் தப்பியது.. சென்னை எழும்பூர் - பாண்டிச்சேரி இரயில் பயணிகள் அதிர்ச்சி..!

இதனால் பயணிகளின் உயிர் பாதுகாக்கப்பட்டது.

Tindivanam Rail Crack | Spot Visual (Photo Credit: @Nakkeeran X)

டிசம்பர் 23, ஓங்கூர் (Viluppuram News): சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் இருந்து, இன்று காலை 06:35 மணியளவில் புதுச்சேரிக்கு (Chennai Egmore to Pondicherry Train) இரயில் புறப்பட்டு வந்தது. இந்த இரயில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் (Tindivanam), ஓங்கூர் பகுதியில் வந்துள்ளது. அப்போது, தண்டவாளத்தில் திடீர் பயங்கர சப்தம் கேட்டுள்ளது. இதனால் இரயில் ஓட்டுநர் இரயிலை நடுவழியில் நிறுத்தினார். உடனடியாக இரயில்வே அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. Breaking: முகத்தில் கவர், அரைநிர்வாண நிலையில் சடலமாக உதவி பேராசிரியர்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.! 

தண்டவாளத்தில் விரிசல் (Railway Track Crack):

நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் ஆய்வு செய்ததில், தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது உறுதியானது. இதனால் மேற்படி இரயில் இயக்கப்படாத காரணத்தால், அலுவலகம் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு செல்ல பாண்டிச்சேரி இரயிலில் இருந்தவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். மொத்தமாக இரயிலில் 1000 பயணிகள் இருந்தனர். தகவல் அறிந்து வந்த அதிகாரிகள், தண்டவாளத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இரயில் சேவை பாதிப்பு:

பழுது சீர் செய்யப்பட்டு சுமார் 1 மணிநேரத்திற்கு பின்னர் இரயில் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. ஓட்டுனரின் சாமர்த்தியம் காரணமாக 1000 பயணிகளின் உயிரும் எவ்வித காயமும் இன்றி தப்பியது. தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக, திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் இரயிலும் தாமதமாக விழுப்புரம் வந்தது. மேலும், பிற இரயில் சேவையும் சில நிமிடங்கள் வரை பாதிக்கப்பட்டது.

ஓட்டுனரின் சாதுர்ய செயல்பாடு காரணமாக மிகப்பெரிய அசம்பாவிதம் மற்றும் விபத்து தவிர்க்கப்ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.