Breaking: கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பயங்கரம்; மருத்துவருக்கு சரமாரி கத்திக்குத்து.!

தாய்க்கு உரிய சிகிச்சை அளிக்காமல் அலட்சியப்படுத்தியதாக, மருத்துவரை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் கிண்டியில் நடந்துள்ளது.

Guindy Kalaingar Centenary Government Hospital | Knife Attack File Pic (Photo Credit: @Jasonphilip8 / Pixabay)

நவம்பர் 13, கிண்டி (Chennai News): சென்னையில் உள்ள கிண்டியில், கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனை (Kalaingar Centenary Government Hospital, Guindy) செயல்பட்டு வருகிறது. இங்கு உள்நோயாளிகள், புறநோயாளிகள் என ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இங்கு புற்றுநோய் பிரிவில் சிறப்பு மருத்துவராக பாலாஜி என்பவர் பணியாற்றி வருகிறார். இன்று அவர் நோயாளிகளை கவனித்துக்கொண்டு இருந்தார்.

மருத்துவருக்கு கத்திக்குத்து (Knife Attack):

இதனிடையே, அப்போது அங்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞர், திடீரென கத்தியை எடுத்து மருத்துவரை சரமாரியாக கத்தியால் குத்தி இருக்கிறார். முகம், வயிறு & கழுத்தில் கத்திக்குத்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் மருத்துவரின் உடலில் இருந்து இரத்தம் வெளியேறி அலறி இருக்கிறார். இதனால் அங்கு நோயாளிகளின் உறவினர்கள், பாதுகாவலர்கள் என பலரும் திரண்டுள்ளனர். TN School Education Department: பள்ளிகளில் அரங்கேறும் பாலியல் சீண்டல்கள்; எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்.!

காவல்துறையினர் விசாரணை:

இதனையடுத்து, கத்திகுத்தை கைவிட்ட நபர், அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். உடனடியாக விரைந்து வந்த சக மருத்துவர்கள், காயமடைந்த மருத்துவரை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். மேலும், கிண்டி காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், மர்ம நபர் யார்? எதற்காக மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது? என விசாரணை செய்து வருகின்றனர். சிசிடிவி கேமிரா காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும், மருத்துவரின் மீது கத்திக்குத்து நடந்து, அவர் இருந்த பகுதிகளில் இரத்தம் வெளியேறி பலரையும் பதறவைத்தது.

அமைச்சர் விளக்கம் & இருவர் கைது:

நிகழ்விடத்தில் இருந்த மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், நோயாளிகள் மற்றும் அவரின் உறவினர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இதனிடையே, இந்த விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். "மருத்துவர் தனது தாய்க்கு உரிய சிகிச்சை வழங்கவில்லை என்பதால்,  ஆத்திரத்தில் 4 பேர் சேர்ந்து சம்பவத்தை அரங்கேற்றியது அம்பலமானது. குற்றவாளிகளில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பழிவாங்கும் நோக்குடன் மருத்துவரின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது உறுதியாகியுள்ளது. இந்த விஷயத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி செய்துள்ளார்.

மேற்படி களநிலவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. 



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif