Chennai Shocker: அளவுக்கு அதிக எலி மருந்து; நெடி தாங்காமல் 2 குழந்தைகள் இருவர் பலி., பெற்றோர் கவலைக்கிடம்..! சென்னையில் சோகம்.!
வீடுகளில் எலித் தொல்லையை குறைக்க முயன்று, குழந்தைகள் பலியான சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
நவம்பர் 15, குன்றத்தூர் (Chennai News): சென்னையில் உள்ள குன்றத்தூர் (Kundrathur), மணஞ்சேரி, தேவேந்திரன் நகரில் வசித்து வருபவர் கிரிதரன் (வயது 34). இவரின் மனைவி பவித்ரா (வயது 30). தம்பதிகளுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், இருவருக்கும் வைஷாலினி (வயது 6) என்ற மகளும், சாய் சுந்தரேசன் (வயது 1) என்ற மகனும் இருக்கின்றனர். குன்றத்தூரில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியில், கிரிதரன் மேலாளராக பணியாற்றி வருகிறார். 6 வயதுடைய மகள் அங்குள்ள தனியார் பள்ளியில் யுகேஜி பயின்று வருகிறார்.
எலித்தொலையை (Rat Poison) குறைக்க முயற்சி:
சமீபகாலமாக இவர்களின் வீட்டில் எலித்தொல்லை இருந்த நிலையில், அதனை கட்டுப்படுத்த தி.நகரில் (T Nagar) செயல்பட்டு வந்த பெஸ்ட் கண்ட்ரோல் (Pest Control) நிறுவனத்தின் உதவியை நாடியுள்ளனர். அந்த நிறுவனத்தின் சார்பில் வந்த 2 ஊழியர்கள், அங்கங்கே எலிமருந்தை தெளித்து இருக்கின்றனர். மேலும், ஒருசில பகுதிகளில் எலி மருந்தை அதிகம் வைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பின் இரவில் உறங்கிய குடும்பத்தினருக்கு, எலி மருந்தின் நெடி தாங்காமல் நள்ளிரவில் உறக்கம் கலைந்துள்ளது. Tiruchendur Express: கைக்குழந்தையுடன் இரயில் - நடைமேடை இடையே சிக்கிய குடும்பம்; திண்டிவனம் இரயில் நிலையத்தில் பதறவைக்கும் சம்பவம்.!
மருத்துவமனையில் அனுமதி & குழந்தைகள் பலி:
மேலும், குழந்தை வைஷாலினிக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. மறுநாள் அதிகாலையில் குடும்பத்தினருக்கு ஒட்டுமொத்தமாக வாந்தி, மயக்கம், நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் கிரிதரன் தனது நண்பர்களுக்கு தொடர்பு கொண்டு விபரத்தை கூறியுள்ளார். பதறிபோனவர்கள் விரைந்து வந்து அவர்களை மீட்டு கோவூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். அங்கு குழந்தை வைஷாலினி மற்றும் சாய் சுரேந்திரன் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
ஒருவர் கைது., காவல்துறையினர் விசாரணை:
மேலும், தம்பதிகள் கிரிதரன் - பவித்ரா ஆகியோர் உயிருக்கு போராடும் நிலையில், ஆபத்தான கட்டத்தில் போரூர் இராமச்சந்திரா (Porur Ramachandra Hospital) மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விஷயம் குறித்து குன்றத்தூர் காவல்துறையினர் (Kundrathur Police) விசாரணை நடத்தினர். வீட்டிற்கு வந்து எலி மருந்து அடித்த சரங்கதாஸ் என்பவர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். சம்பந்தப்பட்ட நிறுவனம் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அளவுக்கு அதிகமாக எலி மருந்தை உபயோகம் செய்ததே குழந்தைகளின் மரணத்திற்கு காரணம் என்பதும் தெரியவந்துள்ளது. தடயவியல் ஆய்வில் எலி மருந்தின் அதீத உபயோகமே மரணத்திற்கு காரணம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.