Tindivanam Train Passengers Protest (Photo Credit: @Sunnewstamil X)

நவம்பர் 15, திண்டிவனம் (Viluppuram News): திருவண்ணாமலை (Tiruvannamalai Family) மாவட்டத்தில் உள்ள தெள்ளார் கிராமத்தில் வசித்து வருபவர் சங்கர். இவர் மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார். இவரின் மகள் கோமதி. இவருக்கு மணிகண்டன் என்பவருடன் திருமணம் நடைபெற்று முடிந்து, தற்போது 7 மாத கைக்குழந்தை கிருத்திகா இருக்கிறார். இவர்களின் உறவினர்கள் சங்கீதா, காயத்ரி. இவர்கள் அனைவரும் நேற்று இரவு பேருந்து மார்க்கமாக திண்டிவனம் (Tindivanam Railway Station) இரயில் நிலையம் வந்துள்ளனர்.

தவறி விழுந்த குடும்பத்தினர்:

பின்னர் அங்கிருந்து திருச்செந்தூர் செல்வதற்காக, திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் (Tiruchendur Express Train) இரயிலில் ஏற டிக்கெட் எடுத்து காத்திருந்தனர். இதனிடையே, திண்டிவனத்திற்கு வந்து நின்ற திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், பயணிகள் இரயில் (Train Passengers) ஏறுவதற்குள் எந்த விதமான முன்னறிவுப்பும் இன்றி இரயில் இயக்கப்பட்டுள்ளது. இதனால் இரயிலில் ஏற முயற்சித்த கோமதி, அவரின் கைக்குழந்தை என நால்வர் அடுத்தடுத்து கால் இடறி தண்டவாளத்திற்கும் - நடைமேடைக்கும் இடையே சிக்கிக்கொண்டனர். வானிலை: அடுத்த 3 மணிநேரத்திற்கு 21 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் வெளுக்கப்போகும் மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.! 

பயணிகள் இரயிலை முற்றுகையிட்டு போராட்டம்:

இதனைக்கண்டு அதிர்ந்துபோன பயணிகள் மற்றும் உறவினர்கள், அபாய சங்கிலியை பிடித்து இழுத்து இரயிலை நிறுத்தினர். மேலும், ரயிலுக்கு இடையே சிக்கிக்கொண்டவர்களை பத்திரமாக மீட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், இரயில் முன்பு குவிந்து திடீர் போராட்டமும் நடத்தினர். காவல்துறையினர் பொதுமக்களை கலைந்துசெல்ல கூறிய நிலையில், அவர்கள் விரைந்து ஏன் இரயில் இயக்கப்பட்டது? இரயில் நிறுத்தத்தில் நிறுத்தாமல் செல்ல முயற்சிப்பது ஏன்? என கேள்வி எழுப்பினர்.

நல்வாய்ப்பாக உயிரிழப்பு இல்லை:

இதற்கு அதிகாரிகள் தரப்பில் உரிய பதில் வழங்கப்படாத நிலையில், ஸ்டேஷன் மாஸ்டரும் பதில் வழங்கவில்லை. இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு சூழல் உண்டாகியது. தற்போது காயமடைந்த குடும்பத்தினர், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். நல்வாய்ப்பாக இவர்களுக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் இரயில் 15 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. Doctor Stabbed in Chennai: "எப்படி இருக்க பாலாஜி?" - நலமுடன் மருத்துவர் பாலாஜி.. ஆதாரத்துடன் வெளியான வீடியோ.! 

பயணிகள் கோரிக்கை:

திண்டிவனத்திற்கும் - சென்னைக்கும் இடையே அதிக பயணிகள் தினந்தோறும் பயணம் செய்யும் நிலையில், அவர்கள் பேருந்து மற்றும் இரயில்களை மட்டுமே நம்பி இருக்கின்றனர். இதனால் பயணிகள் இரயிலை தென்னக இரயில்வே நிர்வாகம் இயக்கினால், விரைவு இரயிலில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் எனவும் இரயில் பயணிகள் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.

பயணிகளின் போராட்டம் குறித்த பரபரப்பு காட்சி: