Chennai News: "என் வாழ்க்கை அழிந்ததுக்கு நீதாண்டா காரணம்" - எச்டிஎப்சி வங்கி ஊழியருக்கு கத்திக்குத்து.. காரணம் என்ன?
நன்னடத்தை விதிகளால் பணியில் இருந்து நீக்கப்பட்டவர், தனது பணிநீக்கத்திற்கு காரணமாக இருந்தவர் என முன்னாள் சக ஊழியரான மேலாளர் ஒருவரை கொலை செய்ய முயற்சி செய்தது நடந்துள்ளது.
டிசம்பர் 21, தி. நகர் (Chennai): சென்னையில் உள்ள தி.நகர் (T Nagar), மாம்பலம், பர்கித் சாலை பகுதியில், எச்.டி.எப்.சி (HDFC Bank) தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. கடந்த டிச.19ம் தேதி மதியம் 12:30 மணிக்கு மேல் வங்கிக்கு வருகை தந்த மர்ம நபர், வங்கியில் பொறுப்பில் இருந்த வர்த்தகம் & அன்னிய செலவாணி மேலாளர் தினேஷிடம் சென்று வாக்குவாதம் செய்தார். பின் சற்றும் எதிர்பாராத விதமாக, உன்னாலேயே எனது வாழ்க்கை வீணாகிப்போனது என கண்களில் நீர் வழிந்தபடி கத்தியை எடுத்து தினேஷை தாக்கி இருக்கிறார். கத்தியை எடுத்ததும் சுதாரித்த தினேஷ், விலகிக்கொண்டதால் காது, முதுகு பகுதியில் பலமாக காயம் ஏற்பட்டது.
ஒரே வங்கியில் பணியாற்றியவர்கள்:
இதனைக்கண்டு அதிர்ந்துபோன வங்கி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள், தாக்கிய நபரை மடக்கிப்பிடித்தனர். தினேஷ் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தகவல் அறிந்து வந்த மாம்பலம் காவல்துறையினர், வங்கி மேலாளர் தினேஷை தாக்கிய நபரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், இளைஞர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மணல்மேல்குடி கிராமத்தில் வசித்து வரும் சதீஷ் (வயது 34) என்பது தெரியவந்தது. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக, தினேஷுடன் சதீஷும் தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்துள்ளனர். Law College Student Murdered: பழிக்குப்பழியாக கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை; நெல்லையை அதிரவைத்த இரட்டைக்கொலைகள்.!
பணிநீக்கத்திற்கு பழிவாங்க அதிர்ச்சி செயல்:
அச்சமயம், நன்னடத்தை விதிமீறலால் சதீஷை பணிநீக்கம் செய்யவே, தினேஷ் தன் மீது புகார் அளித்ததாலேயே தனது வேலை பறிபோனதாக சதீஷ் நினைத்து இருக்கிறார். சுமார் ஒன்றரை ஆண்டுகளாக எங்கு திரிந்தும் வேலை கிடைக்கவில்லை. கேரளாவுக்கு சென்று வேலை தேடியும் கிடைவிக்கவில்லை. இதனால் தினேஷ் மீது ஆத்திரம் ஏற்படவே, கேரளவிலேயே கத்தியை வாங்கிய சதிஷ் சென்னைக்கு வருகை தந்துள்ளார். தினேஷ் பணியாற்றி வரும் அலுவலகம் தெரியாமல் தி.நகர், பாண்டிபஜார், அண்ணா சாலை என கத்தியுடன் வங்கி-வங்கியாக திரிந்தவர், தினேஷை பல இடங்களில் தேடி இருக்கிறார்.
வங்கி-வங்கியாக திரிந்து சட்டத்தை கையில் எடுத்த சாமானியன்:
இறுதியில் தி.நகர் வங்கியில் தினேஷ் வேலை பார்ப்பது தெரியவந்து, கொலை முயற்சி சம்பவம் நடைபெற்றது அம்பலமானது. வேலை பறிபோனதற்கு பின்னரே, தினேஷின் மீது சதிஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதிகாரிகள் வழக்கை கிடப்பில்போட்டதால், தான் சட்டத்தை கையில் எடுத்ததாகவும் சதிஷ் வாக்குமூலம் அளித்து இருக்கிறார். இந்த சம்பவத்தால் வங்கி வளாகமே பதறிப்போனது.