Kodaikanal Cold Wave: கொடைக்கானலில் அதிக குளிரால் உறைந்த நீர்; புற்களில் ரம்மியமான காட்சி.!
இதனால் உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
டிசம்பர் 24, கொடைக்கானல் (Dindigul News): தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, இன்னும் சில வாரங்களில் தனது இறுதிக்கட்டத்தை எட்டவுள்ளது. கடந்த ஆண்டை விடவும், 2024ல் பல மாவட்டங்கள் நல்ல மழையை எதிர்கொண்டுள்ளது. தற்போது மார்கழி, தை மாதம் தொடங்கியுள்ள காரணத்தால், பனிப்பொழிவு அதிகரிக்கிறது. குறிப்பாக இனி வரும் நாட்களில் அதிகாலை வேளைகளில் பனிப்பொழிவு அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. TN Govt Bus: பேருந்துகளை இயக்கும்போது செல்போனில் பேசினால் 29 நாட்கள் வேலை காலி; தமிழ்நாடு போக்குவரத்துத்துறை உச்சகட்ட எச்சரிக்கை.!
உறைபனிப்பொழிவால் மகிழ்ச்சியில் மக்கள்:
இந்நிலையில், திண்டுக்கல் (Dindigul) மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் (Kodaikanal Weather) மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை நல்ல பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் அதிகாலை நேரத்தில் புற்களில் இருந்த நீர் அனைத்தும் உறைந்து பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சி தந்தது. கடந்த ஆண்டுக்கு பின்னர் உள்ளூர் மக்கள் பனிப்பொழிவை சந்தித்துள்ளதால் மகிழ்ச்சியும் அடைந்தனர்.