Dindigul: 8 ஆண்டுகளாக அலைகிறேன்., அரசு அதிகாரிகளா நீங்கள்? - திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் குமுறல்.!
போலியாக பதிவு செய்யப்பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்யக்கூறி, கடந்த 8 ஆண்டுகளாக முதியவர் தனி ஒருவராக போராடி வரும் நிலையில், அவர் தனக்கு நியாயம் கேட்டு ஆதங்கத்துடன் பேசும் காணொளி வெளியாகியுள்ளது.
டிசம்பர் 23, ஆட்சியர் அலுவலகம் (Dindigul News): திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று மக்கள் குறைதீர்ப்பு புகார் பெறப்படும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு வந்திருந்த வேடசந்தூர், எரியோடு கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்ற முதியவர், தான் 8 ஆண்டுகளாக போலி பத்திரப்பதிவு பட்டா ஆணையின் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்தும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். அதிகாரிகளின் நடவடிக்கை இன்மை காரணமாக, கடந்த 8 ஆண்டுகளாக தான் வேறெந்த பணிகளுக்கும் செல்ல இயலாமல், வாழ்க்கையை தொலைத்துவிட்டு நிற்பதாக தெரிவித்து இருக்கிறார். போலி பத்திரப்பதிவு செய்து சொத்துக்களை அபகரித்த நிலையில், அதற்கு எதிராக புகார் அளித்தும் பலனில்லை. "என்னை மன்னித்துவிடு அம்மா" - கைக்குழந்தையை கழுத்தறுத்து கொன்ற தாயின் விபரீத செயல்.. சென்னையில் பயங்கரம்.!
ஆட்சியாளர்களா? திருடர்களா?
இந்த விஷயம் குறித்து அவர் பேசுகையில், "நிர்வாகம் செய்வதற்கு அருகதை உள்ளவர்கள், அதிகாரிகளாக இருக்கிறார்கள். நான் உங்களை அவதூறாக பேசுகிறேன் என தூக்கிலிட்டுக்கொல்லுங்கள். உங்களுக்கு வெள்ளைக்காரன் பரவாயில்லை என்ற எண்ணம் தான் வருகிறது. ஆட்சியாளர்களா நீங்கள்? உங்களின் எண்ணம் எப்படி இருக்கிறது? உங்களுக்காக சுதந்திரம் வாங்கிக்கொடுத்தவர்களை நினைத்தால் ஆத்திரமாக வருகிறது. உங்களின் கால்களை கழுவி நாங்கள் குடிக்க வேண்டும் என எண்ணுகிறீர்களா? பணம் வந்தால் போலி பட்டா ஆணை ரத்து செய்யப்படும் என்றால், பணம் வேண்டும் என்றாலும் கொண்டு வந்து தரவா?. 8 ஆண்டுகளாக நான் அலைகிறேன். தண்டவாளத்தில் திடீர் விரிசல்.. 1000 பேரின் உயிர் தப்பியது.. சென்னை எழும்பூர் - பாண்டிச்சேரி இரயில் பயணிகள் அதிர்ச்சி..!
அதிகாரிகள் மீது அடுக்கடுக்கு குற்றச்சாட்டு:
மாவட்ட ஆட்சியர் மனுக்கள் வாங்கும் முறை பொய். இந்தியாவிலேயே கேவலமான நிர்வாகம் நடக்கும் மாநிலம் தமிழ்நாடு. நான் அரசியல்வாதிகளை குறை சொல்லவில்லை. அதிகாரிகள் திருடர்களாக இருக்கிறார்கள். 8 ஆண்டுகளாக போலி பட்டாவை ரத்து செய்ய வேண்டி மனு கொடுக்கிறேன். நான் கொடுக்கும் மனு காணாமல் போனதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். பணம் கொடுத்தால் 30 நாட்களில் பட்டா வருகிறது. திருட்டு பட்டா பதிவு செய்து தருகிறார்கள். எங்களுடன் பிறந்து எங்களுடன் வளர்ந்து எங்களுக்கே மோசடி செய்கிறீர்கள். 150 முறை அதிகாரிகளுக்கு மெயில், மனு வழங்கியும் பலன் இல்லை. பல நாட்கள் நான் தூங்கவில்லை. என் வயிறெல்லாம் எரிகிறது. ஐ.ஏ.எஸ் படித்தவர் அலுவலகத்தில் கொடுத்த மனு இல்லை என்றால் எப்படி? கேடுகெட்ட நிர்வாகத்தை நம்பி நான் மோசடி போயுள்ளேன். இங்குள்ள அதிகாரிகள் அனைவரும் திருடர்கள்" என ஆதங்கத்தில் முதியவர் பேசினார்.
அவரின் மனுவை உடனடியாக பெறவைத்த காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள், அவரை அங்கிருந்து அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு, அனுப்பியும் வைத்தனர்.
முதியவர் முருகன் தனது கோரிக்கை குறித்து புகார் தெரிவிக்கும் காணொளி:
வீடியோ நன்றி: பாலிமர் தொலைக்காட்சி