Ulundurpet Accident: பேருந்து - லாரிக்கு நடுவே சிக்கி அப்பளமாக நொறுங்கிய கார்; 2 பெண்கள் பலி., 51 பேர் படுகாயம்.!
ஆகையால், மிதமான வேகம், சுதாரிப்பான பயணமே நமது உயிரை பாதுகாக்க வழிவகை செய்யும் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து செயல்பட வேண்டும்.
ஜனவரி 29, உளுந்தூர்பேட்டை (Kallakurichi News): சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் (Trichy Chennai NH Accident) நடக்கும் சாலை விபத்துகளை குறைக்கவும், மக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும், பல்வேறு இடங்களில் தற்போது மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் தற்காலிகமாக வாகனங்கள் பாலம் வேலை நடைபெறும் இடத்தில் பொறுமையாக ஊர்ந்து செல்கின்றன. புதிதாக இவ்வழித்தடத்தில் பயணிக்கும் ஓட்டுனர்கள், சாலையின் அமைவு தெரியாமல் பயணிப்பதால் சில நேரங்களில் விபத்துகளும் நடைபெறுகின்றன.
அதிவேகம், திடீர் பிரேக்கால் அடுத்தடுத்து நொடியில் நடந்த சோகம்: இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை (Ulundurpet Accident), ஆசனூர் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் சிப்காட் தற்காலிக சாலை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்ட நிலையில், சென்னை நோக்கி பயணம் செய்த லாரி ஓட்டுநர் வேகமாக வாகனத்தை இயக்கி இருக்கிறார். அச்சமயம் சாலை சேதமடைந்து இருக்கவே, அவசர கதியில் பிரேக் அடித்துள்ளார். லாரிக்கு பின்னால் திண்டுக்கல்லில் இருந்து சென்னை நோக்கி பயணம் செய்த கார் மோதி விபத்திற்குள்ளானது. AI Apps Scam Alert: சிறார்களை குறிவைத்து மோசடியை அரங்கேற்றும் கும்பல்; ஏஐ பயன்பாடில் அதிர்ச்சி ரிஸ்க்.!
அப்பளமாக நொறுங்கிய கார்: காருக்கு பின்புறம் திருச்சியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி பயணம் செய்த சுற்றுலா பயணிகள் பேருந்து மோதிவிட்டு, பெரும் விபத்தை தவிர்க்க பேருந்து ஓட்டுனரால் அவசர கதியில் சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறக்கப்பட்டது. இதில் பேருந்து 10 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து நின்றது. இரண்டு வாகனங்களுக்கு நடுவே சிக்கிய கார், அப்பளம் போல நொறுங்கி இருந்தது.
திண்டுக்கல்லை சேர்ந்தவரின் மனைவி, மகள் பலி: இவ்விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், காரில் சிக்கியிருந்த திண்டுக்கல்லை சேர்ந்த அழகுராஜா மற்றும் அவரது மனைவி, மகள் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதில் அழகுராஜாவின் மனைவி மற்றும் மகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பேருந்தில் பயணம் செய்த ஓட்டுநர் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் சிக்கி காயமடைந்தோர் உளுந்தூர்பேட்டை மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.