Online Scam (Photo Credit: Pixabay)

ஜனவரி 28, புதுடெல்லி (Technology News): சர்வதேச அளவில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ (Artificial Intelligence - AI Technology) தொழில்நுப்ட பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நமது செல்போன்களில் ஒவ்வொரு செயலியின் பயன்பாடு தொடங்கி, கேம்கள் வரை ஏஐ உட்புகுத்தப்படுகிறது. ஆன்லைனில் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவோர், ஏஐ அறிமுகத்தை தங்களுக்கு சாதகமாக்கி மோசடி சம்பவத்திலும் ஈடுபட தொடங்கியுள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற ஆய்வுகளில் இவைகுறித்த தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

சிறார்களை குறிவைத்து ஏஐ பெயரில் மோசடி: அதாவது, ஏஐ தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட கேம்கள் உட்பட பிற செயலிகளில், நாம் வழங்கும் தகவலை வைத்து பல்வேறு விதமான ஆசையை தூண்டும் விபரங்கள் விளம்பரமாக அனுப்பி வைக்கப்பட்டு செல்போன்கள் ஹேக்கிங் செய்யப்படும் வாய்ப்புகள் அதிகரிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக சிறார்களை குறிவைத்து தற்போது மோசடி அதிகரிக்க தொடங்கியுள்ளது. US China Talks on Taiwan Issue: மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தைவான் பிரச்சனை; அமெரிக்கா - சீனா உறவுகள் பாதிப்படைய வாய்ப்பு.! 

Online Scam Alert (Photo Credit: Pixabay)

நமது தகவலே மூலதனம்: சிறார்கள் ஏஐ கேம்களை பதிவிறக்கம் செய்து விளையாடும்போதும், ஏஐ பாட்களிடம் உரையாற்றும்போதும், அது நமது வயது உட்பட பிற விபரங்களை சேகரிக்கிறது. இந்த தகவலை வைத்து மோசடியாளர்கள் குழந்தைகள் பயன்படுத்தும் செல்போன்களை கண்டறிந்து, அவர்களுக்கு பிடித்த வகையிலான விளம்பரத்தை பதிவு செய்து மோசடிக்கான வலையை வீசுகின்றனர். பிளே ஸ்டேஷன், வீட்டு உபயோக பொருள், விளையாட்டு சாதனங்கள் அனுப்புவதாக மோசடி செயல்கள் தொடருகின்றன.

பெற்றோர்களே விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: தற்போது இவ்வாறான மோசடிகள் அதிகரித்து குழந்தைகளை குறிவைத்து, அவர்களின் ஆசையை தூண்டி ஏடிஎம் கார்டு உட்பட பிற விபரங்களை பெரும் வகையில் விளம்பரங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இவற்றை வைத்து நிதி மோசடி, குழந்தைகளை மிரட்டி பணம் பறித்தல் போன்றவையும் செய்யப்படுகின்றன. இதனால் எதிர்வரும் காலத்தில் பெற்றோர் தங்களின் குழந்தைகளிடம் சைபர் மோசடிகள் குறித்து உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.