Krishnagiri Shocker: குடிகார கணவனை கூலிப்படை ஏவி கண்டித்த மனைவி.. வினைச்செயல் விபரீதத்தால் கொலைகேசில் சிக்கிய தாய்-மகள்..!

கூலிப்படையை வைத்து கணவரை கண்டிக்க திட்டமிட்ட மனைவியின் நாடகம் பொய்யாகி, இறுதியில் அவர் கொலை கேசில் சிக்கிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

Accuse Madeswari & Sivakasi Kumar | Uthangarai Police Station (Photo Credit: Facebook)

நவம்பர் 11, ஊத்தங்கரை (Krishnagiri News): போதை கணவனை கண்டிக்க கூலிப்படைக்கு ரூ.20 ஆயிரம் கொடுத்து, கணவரின் கை-காலை உடைக்க மனைவி உத்தரவிட்டார். இந்த தாக்குதல் சம்பவத்தில் கணவர் உயிரிழந்ததால் கொலை கேசில் குடும்பமே சிக்கிக்கொண்டது.

சாலையோரம் சடலம் மீட்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை, வடதாசம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் கோவிந்தசாமி. இவர் சம்பவத்தன்று கிருஷ்ணகிரி - ஊத்தங்கரை சாலையோரம் சடலமாக மீட்கப்பட்டார். இவரை மர்ம வாகனம் மோதி சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்து இருக்கலாம் என பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதிர்ச்சி உண்மை அம்பலம்:

தகவல் அறிந்த ஊத்தங்கரை காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து கோவிந்தசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விசாரணையில் விபத்து நடந்து கோவிந்தசாமி உயிரிழந்திருக்க வாய்ப்பு இல்லை என்பது தெரியவந்து, அவரின் மனைவி, மகள்களை அழைத்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, திடுக்கிடும் தகவலும் அம்பலமானது. Youth Arrested: ஓடும் இரயிலில் பெண் வங்கி மேலாளருக்கு பாலியல் தொல்லை; வடமாநில இளைஞர் கைது.! 

கணவரை கண்டிக்க முயற்சி:

அதாவது, கோவிந்தசாமி மதுபோதையில் தினமும் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் கணவரின் தொல்லை தாங்காமல் அவதிப்பட்ட கோவிந்தசாமியின் மனைவி மாதேஸ்வரி, கூலிப்படையை சேர்ந்தவர்களுக்கு கணவரின் கை-கால்களை உடைத்து கண்டிக்குமாறு ரூ.20 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட கூலிப்படை தாக்கியதில் கோவிந்தசாமி உயிரிழந்தார்.

தாக்குதலில் பரிதாப பலி:

கிரிக்கெட் மட்டை கொண்டு நடந்த தாக்குதலில், அவரின் உயிர் பிரிந்துள்ளது. இதனால் பயணத்தில் உடலை சாலை விபத்தில் உயிரிழந்ததாக சித்தரிக்க சாலையோரம் கொண்டு வீசி இருக்கின்றனர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, மாதேஸ்வரி, அவரின் மகள் சரண்யா, கூலிப்படையை சேர்ந்த வேல்முருகன், சிவகாசி குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதான அனைவரும் விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.