Namakkal Shocker: பள்ளி வளாகத்தில் நடந்த தகராறில் 16 வயது மாணவர் அடித்துக்கொலை; சக மாணவர் அதிர்ச்சி செயல்.!

பள்ளிக்கூடம் நிறைவடைந்து வீட்டிற்கு வரும் வேளையில், செருப்பை எடுத்ததில் நடந்த தகராறு கொலையில் முடிந்தது.

Murder (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 24, எருமப்பட்டி (Namakkal News): நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமப்பட்டி, நவலப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ். இவர் லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். ரமேஷின் மகன் ஆகாஷ் (16).இவர் வரகூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசுப்பள்ளியில், பதினோராம் வகுப்பு பயின்று வருகிறார். இதே வகுப்பில், செல்லிபாளையம் கிராமத்தில் வசித்து வரும் தொழிலாளியின் மகனும் பயின்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையான நேற்று மாலை 4 மணியளவில், பள்ளி நிறைவுபெற்று பின் வீட்டிற்கு வந்துகொண்டு இருக்கும்போது, வகுப்பறை வாசலில் கழட்டி விடப்பட்டு இருந்த ஆகாஷின் காலணி மாயமாகியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ், தனது காலணியை மறைத்து வைத்ததாக எண்ணி, சக மாணவர்களை கடிந்துகொண்டுள்ளார். Vijay’s TVK Flag Issue: விஜய்யின் கட்சி கொடியில் இடம்பெற்ற யானை.. எழுந்த குற்றச்சாட்டுக்கள்..! 

வாக்குவாதம் கொலையில் முடிந்தது:

அப்போது, மேற்கூறிய தொழிலாளியின் மகனான மாணவர் ஒருவர், காலணியை நான்தான் வைத்துள்ளேன், எதற்காக திட்டுகிறாய்? என கேட்டு இருக்கிறார். இந்த சம்பவத்தில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறில் ஆத்திரமடைந்தவர்கள் வாக்குவாதம் செய்து, ஒருகட்டத்தில் மாறி-மாறி சண்டையிட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் சுருண்டு விழுந்த ஆகாஷ் மீண்டும் எழுந்துகொள்ளவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் ஆகாஷை எழுப்பியபோது, மயக்கத்திலேயே அவர் இருந்ததால் தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது. தகவலை அறிந்தது உடனடியாக மாணவனை மீட்ட தலைமை ஆசிரியர், எருமப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவரை அனுமதி செய்துள்ளார்.

அங்கு நேற்று இரவில் ஆகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த எருமப்பட்டி காவல்துறையினர், ஆகாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆகாஷிடம் சண்டையிட்ட மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.