Namakkal Accident: காலையில் நடைப்பயிற்சி சென்றவர்களுக்கு சோகம்.. ஆம்னி கார் மோதி மூவர் மரணம்.!

பிரதான சாலைகளில் நடைப்பயிற்சி தவிர்க்க வேண்டிய ஒன்று ஆகும்.

Namakkal Accident on 01-Dec-2024 (Photo Credit: @Sriramrpckanna1 X)

டிசம்பர் 01, மோகனூர் (Namakkal News): நாமக்கல் (Nama) மாவட்டத்தில் உள்ள மோகனூர், காட்டூர் கிராமத்தில் வசித்து வருபவர் மலையண்ணன் (வயது 68). இவரின் மனைவி நிர்மலா (வயது 55). இதே பகுதியில் வசித்து வரும் பெண்மணி செல்லம்மாள் (வயது 65). இவர்கள் மூவரும் தினமும் நடைப்பயிற்சிக்கு சென்று வருவது வாடிக்கை ஆகும். இதனிடையே, ஞாயிற்றுக்கிழமையான இன்று காலை, சுமார் 06:00 மணியளவில் மூவரும் நடைப்பயிற்சிக்கு புறப்பட்டுள்ளனர்.

நடைப்பயிற்சி:

நாமக்கல் - மோகனூர் சாலையில் இவர்கள் ஓரமாக நடந்து, பின் வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது, நாமக்கல்லில் இருந்து மீன்களை ஏற்றிய ஆம்னி வேன் ஒன்று, திடீரென இவர்களின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் நடைப்பயிற்சி செய்த மூவரில் மலையண்ணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். Amazon Delivery Scam: லேப்டாப் ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் வந்த கடப்பா கல்.. கைவிரித்த அமேசான்.. சென்னை இளைஞர் குமுறல்.! 

மூவரும் அடுத்தடுத்து பலி:

பிற இருவரும் உயிருக்கு போராடிய நிலையில், அவர்களின் மீது மோதிய காரும் சாலையோர தடுப்பில் மோதி விபத்தில் சிக்கி நின்றது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், கார் ஓட்டுநர் மற்றும் காயமடைந்த செல்லம்மாள், நிர்மலா ஆகியோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினர் விசாரணை:

அங்கு செல்லம்மாள், நிர்மலா ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஆம்னி வேனை இயக்கி வந்த மோகனூரில் வசித்து வரும் மணிகண்டனை (வயது 40) கைது செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பனிமூட்டம்:

கடந்த 2 நாட்களாகவே நாமக்கல், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் காலையில் பனிமூட்டம் காணப்பட்ட நிலையில், பார்வை தெரியாமல் சாலையோரம் நடைப்பயிற்சி மேற்கொண்டவர்கள் மீது வாகனம் மோதி விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரியவருகிறது.