Trichy SP Varun Kumar: "நாம் தமிழர் பிரிவினைவாத கட்சி" திருச்சி எஸ் பி வருண்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு..!

வருண்குமார் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SP Varun Kumar | Seeman (Photo Credit: @tanmay_kumar29 X)

டிசம்பர் 05, சண்டிகர் (Political News): ஐந்தாவது தேசிய ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு சண்டிகர் மாநிலத்தில் நடைபெற்றது. மாநாட்டில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றி வரும் இளம் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அழைப்பு விடப்பட்டு கலந்து கொண்டனர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் அழைப்பின் பேரில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் இணையதள குற்றங்களை கண்காணிப்பது, தடுப்பது குறித்து விரிவான விளக்கத்தை அனைத்து ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியில் திருச்சி எஸ்.பி.வருண்குமார் ஆதாரங்களோடு பேசினார்.

அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியினர், உலகில் எங்கிருந்தும், இணையதளங்கள் வாயிலாக பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். நாம் தமிழர் இயக்கம் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவு இயக்கம். குற்றச்செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்ட நாம் தமிழர் இயக்க நிர்வாகிகள் மீது, சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்காக, என்னையும் ஐ.பி.எஸ்., அதிகாரியான என் மனைவி மற்றும் குழந்தைகளை ஆபாசமாக சித்தரித்து எக்ஸ், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இவையனைத்தையும் வெளிநாடுகளில் இருப்போரை வைத்து செய்துள்ளனர். இதுகுறித்து முறையாக புகார் அளிக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. Family Murder: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொடூர கொலை.. அதிகாலையில் நேர்ந்த துயர சம்பவம்..!

இந்த விஷயத்தில் நியாயத்தின் பக்கம் இருப்போம் என்று சொல்லி, உயர் அதிகாரிகளும், தமிழக அரசும் எனக்கு ஆதரவு அளித்தது. ஆனால், யார் செய்தது என்ற விபரம் கேட்டு, சமூக வலைதள அலுவலகங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. மூன்று மாதமாகியும் இன்னும் அந்த விபரங்கள் கிடைக்கவில்லை. அதேபோல, என் குடும்பத்தாரை ஆபாசமாக சித்தரித்து வெளியிடப்பட்ட படங்கள் சமூக வலைதளங்களில் இன்றைக்கும் உள்ளன. நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உலகம் முழுதும் உள்ளனர். பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் அவ்வியக்கத்தைச் சேர்ந்தோரையும், இதுபோன்ற இயக்கங்களையும் சைபர் கிரைம் புலனாய்வில் உயரிய அமைப்பான ஐபோர்சி தீவிரமாக கண்காணிக்க வேண்டும்." என்று கூறினார்.

திருச்சி எஸ் பி வருண்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு: