Aavin Employee Death: ஆவின் பால் உற்பத்தி மையத்தில் பயங்கரம்; இயந்திரத்தில் சிக்கி தலை துண்டாகி இளம்பெண் பலி.!

பல கனவுடன் கணவன் - மனைவியாக வெவ்வேறு இடங்களில் பணியாற்றி வந்த தம்பதியில், பெண் தலை துண்டித்து கொடூரமான வகையில் தொழிற்சாலையில் நடந்த விபத்தில் உயிரிழந்த சோகம் தமிழ்நாட்டை உலுக்கி இருக்கிறது.

Aavin Employee Umarani (Photo Credit: @Idam_Valam X)

ஆகஸ்ட் 22, காக்களூர் (Tiruvallur News): திருவள்ளூர் (Tiruvallur) மாவட்டத்தில் உள்ள காக்களூர் (Kakkalur) பகுதியில், ஆவின் (Aavin Milk Plant) பால் உற்பத்தி தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து நாளொன்றுக்கு 90 ஆயிரம் லிட்டர் பால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. காக்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் கார்த்திக். இவரின் மனைவி உமாராணி (வயது 30). இவர் சேலத்தை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். தற்போது அவரின் கணவர் இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வரும் நிலையில், உமாராணி ஆவின் தொழிற்சாலையில் ஒப்பந்த பணியாளராக வேலைக்கு சென்று வந்துள்ளார். இதனிடையே, நேற்று முன்தினம் இரவில் உமாராணி உட்பட 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டு வந்து இருக்கின்றனர். TVK Flag Anthem: "தமிழன் கொடி பறக்குது.." - தவெக கட்சி பாடல் வெளியீடு..!

தலை துண்டிக்கப்பட்டு பரிதாப பலி:

பால் பாக்கெட்டுகள் உற்பத்தியான பின்னர், உமாராணி அதனை பிளாஸ்டிக் பாத்திரத்தில் அடுக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார். அவர் சம்பவத்தன்று பணியின்போது சுடிதாருடன் துப்பட்டா அணிந்திருந்த நிலையில், அருகில் இருந்த கன்வேயர் பெல்ட் இயந்திரத்தில் துப்பட்டா மற்றும் தலைமுடி சிக்கி இருக்கிறது. வேகமாக இயங்கிக்கொண்டு இருந்த கன்வேயர் பெல்ட் காரணமாக, தலை துண்டிக்கப்பட்டு உடல் துண்டாகி உமாராணி உயிரிழந்தார். இதனைக்கண்டு அதிர்ந்துபோன ஊழியர்கள், பின் காவல்துறைனருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், உமாரணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உமாராணி - கார்த்திக் தம்பதிக்கு 2 மகன்கள், 1 மகள் என 3 குழந்தைகளும் இருக்கின்றனர். TN Weather Update: தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.. நாளைய வானிலை அப்டேட்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

நிர்வாகத்தின் நடவடிக்கை & உறுதி:

ஆவின் பால் உற்பத்தி தொழிற்சாலையில் நடந்த இந்த சம்பவத்தால், தற்காலிகமாக பால் விநியோகமும் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும், நிறுவனத்தின் ஒப்பந்த ஊழியரான மேற்பார்வையாளர் வருண்குமார் கைது செய்யப்பட்டார். இரவுநேர பொறுப்பாளர் அஜித்குமார் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும், இயந்திர பிரிவு பொறுப்பாளர் அகிலேஷ் ராஜா, கண்காணிப்பாளர்கள் விக்னேஷ், கமல் சிங், உதவியாளர்கள் சுரேஷ், அருண் குமார் ஆகியோரின் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் பாதுகாப்பு நடவடிக்கையை அதிகரித்து, உரிய நடவடிக்கை எடுத்து இவ்வாறான சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக்கொள்வதாக உறுதியளித்துள்ள ஆவின் நிர்வாகம், பெண் பணியாளர்களுக்கு மேல் சட்டை (ஓவர் கோட்), தலைமுடி பாதுகாப்பு உறை போன்றவற்றை அணிய வேண்டும் என்ற விதிமுறையையும் அறிவித்து இருக்கிறது.