Tiruvallur Accident: லாரி - கார் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து; 5 கல்லூரி மாணவர்கள் பரிதாப பலி.!

21 வயது கல்லூரி மாணவர்கள் ஆந்திரா சென்று திரும்பும் வழியில், திருத்தணியில் ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Road Accident (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 12, திருத்தணி (Tiruvallur News): திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி (Tiruttani Accident), ராமஞ்சேரி பகுதியில் நேற்று கார் ஒன்று வந்துகொண்டு இருந்தது. இந்த காரும் - லாரியும் திடீரென மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தைக்கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் பொதுமக்கள், விபத்தில் காயமடைந்தோரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், காரில் பயணம் செய்தவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வரும் 7 மாணவர்கள் என்பதும், இவர்கள் ஆந்திரா சென்று திரும்பி வரும்போது விபத்தில் சுக்கியதும் தெரியவந்தது. இவ்விபத்தில் 5 மாணவர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், 2 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Kodaikanal Shocker: கிரில் சிக்கன் சமைத்து சாப்பிட்ட 2 நண்பர்கள் கார்பன் மோனாக்சைடு தாக்கி பலி; நடந்தது என்ன?.. நெஞ்சை நடுங்கவைக்கும் சோகம்.! 

21 வயதாகவும் மாணவர்கள்:

கார் - லாரி நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தால் இந்த சோகம் நடந்ததும் அம்பலமாகி இருக்கிறது. நேற்று மாலை 06:30 மணியளவில் சென்னையில் இருந்து திருத்தணி (Chennai to Tiruttani) நோக்கி பயணம் செய்த லாரியும், எதிர்திசையில் வந்த லாரியும் மோதி விபத்தில் சிக்கி இருக்கிறது. இவ்விபத்தில் சேர்த்தன், யுகேஷ், நித்திஷ், நித்திஷ் வர்மா, ராமகோமன் ஆகியோர் உயிரிழந்தனர். இவர்களுக்கு 21 வயது ஆகிறது. மாணவர்கள் சைதன்யா, விஷ்ணு ஆகியோர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து மாணவர்களின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கண்ணீருடன் விரைந்துள்ளனர்.