Tiruppur Accident: 2 கல்லூரி மாணவர்களின் உயிருக்கு எமனான திருப்பூர் தனியார் பேருந்து.. ஓட்டுநர், நடத்துனர் கைது.!

அதிவேகம், அலட்சியம் உட்பட பல்வேறு காரணங்களால் நேர்ந்த விபத்தில் 2 கல்லூரி மாணவர்களின் உயிர் பிரிந்தது. பலர் படுகாயத்துடன் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Tiruppur Uthukuli Sakthi Bus Accident (Photo Credit: @TheSouthfirst X)

பிப்ரவரி 07, ஊத்துக்குளி (Tiruppur News): திருப்பூர் (Tiruppur Accident) மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி (Uthukuli), செங்கம்பள்ளி பகுதியில், 70 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பயணம் செய்த சக்தி டிரான்ஸ்போர்ட் தனியார் பேருந்து, திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கி பயணித்தபோது விபத்தில் சிக்கியது. பேருந்து, செங்கம்பள்ளியில் உள்ள பல்லகவுண்டம்பட்டி கிராமம் பகுதியில் சென்றபோது விபத்து நேர்ந்தது. அதிக பாரத்துடன், அதிவேகத்துடன் பயணம் செய்த பேருந்து, முன்னால் சென்றுகொண்டு இருந்த லாரியை முந்திச் செல்ல முற்ப்பட்டபோது, நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியது. Tirupathur Shocker: திமுக துணை ஊராட்சி மன்ற தலைவரின் வீடுபுகுந்து பயங்கரம்.. மனைவி கொடூர கொலை., கணவர் உயிர் ஊசல்.! தமிழகமே ஷாக்.! 

பேருந்தின் ஓட்டுநர் & நடத்துனர் கைது:

விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர்களான 19 வயதுடைய ஹரி, பெரியசாமி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஹரிஷ் என்ற மாணவரின் கைகள் துண்டாகிப்போனது. 30 க்கும் மேற்பட்டோர் ஈரோடு அரசு பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், பலத்த காயத்துடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், பேருந்தை அஜாக்கிரதையாக, வேகமாக, கவனமின்மையாக இயக்கி விபத்தை ஏற்படுத்த காரணமாக அமைந்த பேருந்தின் ஓட்டுநர் மாரசாமி, நடத்துனர் துரைசாமி ஆகியோரின் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இருவரின் மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்தனர்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now