DMK Logo | Death File Pic (Photo Credit: @Arivalayam X / Pixabay)

பிப்ரவரி 07, கோ. புளியம்பட்டி (Tirupathur News): திருப்பத்தூர் (Tirupathur) மாவட்டத்தில் உள்ள கோ. புளியம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் திருப்பதி. இவர் திமுக கட்சியின் பிரதிநிதி ஆவார், ஊராட்சி மன்ற துணைத் தலைவராகவும் இருந்து வருகிறார். திருப்பதியின் மனைவி வசந்தி. தம்பதிகள் இருவரும் நேற்று இரவு தங்களின் வீட்டில் இருந்தனர். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் தம்பதிகளை சரமாரியாக அரிவாள் உட்பட பயங்கர ஆயுதத்தால் வெட்டி இருக்கின்றனர்.

மனைவி பலி., கணவர் படுகாயம்:

தம்பதிகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே, கொடூர தாக்குதலை முன்னெடுத்த கும்பல், அங்கிருந்து தப்பிச் சென்றது. இந்த தாக்குதல் சம்பவத்தில் திமுக ஊராட்சி மன்ற துணை தலைவரின் மனைவி வசந்தி, நிகழ்விடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். மேலும், திருப்பதி பலத்த காயத்துடன் மீட்கப்பட்டார். Pregnant Woman: கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை, ஓடும் இரயிலில் கீழே தள்ளி கொலை முயற்சி: வேலூரில் பயங்கரம்.! 

நிலம் தொடர்பான தகராறு என தகவல்:

அவர் உடனடியாக மீட்கப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், திருப்பதியின் வீட்டின் அருகே இருக்கும் 70 சென்ட் நிலம் தொடர்பாக, இருதரப்பு பிரச்சனை இருந்தது தெரியவந்தது.

காவல்துறை குவிப்பு:

இதனால் நிலப்பிரச்சனையில் எழுந்த முன்விரோதம் காரணமாக தம்பதிகளை கொலை செய்ய முயற்சி நடந்து, அதில் வசந்தி கொல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்ற சூழ்நிலை நிலவி வருவதால், அங்கு 50 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.