கள்ளக்காதலியின் 5 வயது மகனுக்கு பாலியல் தொல்லை.. 2 இளைஞர்களின் அதிர்ச்சி செயல்.. தமிழ்நாட்டில் இப்படியா?

5 வயது சிறுவனை அழைத்து வந்து காரில் பாலியல் தொல்லை கொடுத்த கயவன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த விஷயம் குறித்த வழக்கில் தலைமறைவான ஒருவருக்கு அதிகாரிகள் வலைவீசியுள்ளனர்.

Nasar Ali & Velumani (Photo Credit: YouTube)

ஏப்ரல் 27, திருவெறும்பூர் (Trichy News): திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர், ஏர்போர்ட் வசந்த் நகரைச் சேர்ந்தவர் நாசர். இவர் பிரபல தனியார் ஹோட்டல் உரிமையாளரின் மகன் ஆவார். இவரின் நண்பர் வேலுமணி. இவர்களுக்கு பெண் ஒருவருடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று தனது கள்ளகாதலியின் 5 வயது மகனை தன்னுடன் காரில் அழைத்து வந்த நாசர் பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. 8 வயது மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் தொல்லை.. 48 வயது நபரின் அதிர்ச்சி செயல்.!

அதிகாரிகள் விசாரணை:

இதனால் சிறுவன் அலறிய நிலையில், இதனை கவனித்த பொதுமக்கள் நாசரை பிடித்தனர். மேலும், அவருடன் இருந்த வேலுமணி தப்பி ஓடினார். இதனையடுத்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் நாசரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும், அவருடன் இருந்த வேலுமணிக்கு அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement