Husband Kills by Wife: மதுவில் சயனைடு கலந்து கணவர் கொலை; கள்ளக்காதல் உறவால் மனைவியின் விபரீத செயல்.! விழுப்புரத்தில் அதிர்ச்சி.!

இந்த விவகாரத்தில் 2 பெண்கள் 2 ஆண்கள் என 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Poison | Death File Pic (Photo Credit: Pixabay)

டிசம்பர் 20, வீ. சித்தாமூர் (Villupuram News): விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இந்திரா நகர் பகுதியில், கடந்த டிச.14 அன்று, சாலையோரம் சடலம் ஒன்று கிடந்தது. இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா காவல்துறையினர், உயிரிழந்த நபரின் உடலை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த நபர் யார்? என விசாரணையை முன்னெடுத்தனர். விசாரணையின் தொடக்கத்தில், சடலமாக மீட்கப்பட்டவர் போதையில் இருந்தது போன்ற அடையாளம் தென்பட்டது. இதனால் அளவுக்கு அதிக மதுபானம் அருந்தியதால் மரணம் நேர்ந்து இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகித்தனர்.

விசாரணையில் அதிர்ச்சி திருப்பம்:

பிரேத பரிசோதனை அறிக்கைக்காக அதிகாரிகள் காத்திருந்த நிலையில், முடிவில் மதுபானத்தில் சயனைடு கலந்து இருந்தது தெரியவந்தது. இதனால் அவர் உயிரிழந்ததும் அம்பலமானது. இதனையடுத்து, கொலையானவர் வி.சித்தாமூர் கிராமத்தில் வசித்து வரும் மணிகண்டன், அவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார் என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். மணிகண்டனின் மனைவியான தமிழரசி என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, கொலைக்கான அதிர்ச்சி தகவல் வெளிவந்தது. கடலூர்: 17 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை.. வேதியியல் ஆசிரியர் அதிர்ச்சி செயல்..! 

தமிழரசியின் கள்ளக்காதல்:

அதாவது, சித்தாமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கொத்தனார் மணிகண்டன். இவரின் மனைவி தமிழரசி. தமிழரசிக்கு சென்னையில் வசித்து வந்த சங்கர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பல ஆண்டுகளாக கள்ளக்காதல் உறவில் இருந்து வந்துள்ளனர். இந்த விஷயம் மணிகண்டனுக்கு தெரியவந்துள்ளது. சென்னையில் மணிகண்டன் தனது மனைவியுடன் வசித்து வந்தபோதே, தமிழரசி - சங்கர் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவியை கண்டித்தவர், சொந்த ஊரான வீ. சித்தாமூருக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு கொத்தனாராக வேலைக்கு சென்று வந்துள்ளார்.

Crime Scene File Pic (Photo Credit: Pixabay)

கொலை திட்டம்:

கணவர் வேலைக்கு சென்ற பின்னர் வீட்டில் இருக்கும் தமிழரசி, தனது கள்ளக்காதலர் ஷங்கருடன் தொடர்பை நீடித்து வந்துள்ளார். இந்த விவகாரத்தை அறிந்த மணிகண்டன் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கள்ளக்காதல் ஜோடி, தங்களின் உறவுக்கு எதிராக இருக்கும் மணிகண்டனை கொலை செய்ய திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக சங்கரின் நண்பரான கார்த்திக் ராஜா, சீனிவாசன் ஆகியோரை கூட்டாளிகளாக இணைத்துக்கொண்டு கொலைக்கான திட்டம் தீட்டப்பட்டுள்ளது. திருமணமான 3 ஆண்டுகளில் குழந்தையில்லாத ஏக்கம்.. 27 வயது இளம்பெண் மனநலம் பாதிக்கப்பட்டு தற்கொலை.! 

சயனைடு கலந்து கொலை:

கடந்த டிச.14 அன்று கார்த்திக் ராஜாவின் மனைவி சுவேதா, மணிகண்டனுக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். கொத்தனாரான மணிகண்டனிடம், கட்டிட வேலை இருப்பதாகவும், தான் சொல்லும் இடத்திற்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார். வேலை விஷயம் என நம்பிய மணிகண்டனும், சுவேதா அழைத்த இடத்திற்கு சென்றுள்ளார். இந்திரா நகர் பகுதிக்கு வந்த மணிகண்டனுடன், கார்த்திக் ராஜா மற்றும் சீனிவாசன் சேர்ந்து மதுபானம் அருந்தி இருக்கின்றனர். பின் மதுவில் மணிகண்டனுக்கு தெரியாமல் சயனைடு கொடுத்து குடிக்க வைத்துள்ளனர். போதையில் தள்ளாடியபடி புறப்பட்ட மணிகண்டன், சயனைடு விஷத்தின் தன்மையால் நெடுஞ்சாலை சர்விஸ் சாலையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். மணிகண்டனின் உயிரிழப்பை உறுதி செய்த கும்பல், அங்கிருந்து தப்பிச் சென்றது அம்பலமானது.

4 பேர் கைது., ஒருவருக்கு வலை:

இதனையடுத்து விசாரணையை முன்னெடுத்த காவல்துறையினர், மணிகண்டனின் மனைவி தமிழரசி, அவரின் கள்ளக்காதலன் சங்கர், சங்கரின் நண்பர்கள் சீனிவாசன், கார்த்திக் ராஜாவின் மனைவி சுவேதா ஆகிய நால்வரை கைது செய்தனர். தலைமறைவான கார்த்திக் ராஜாவை அதிகாரிகள் தேடி வலைவீசி இருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif