டிசம்பர் 19, திருமங்கலம் (Chennai News): சென்னையில் உள்ள திருமங்கலம், பாடி குப்பம் பகுதியில் வசித்து வருபவர் கார்த்திகேயன் (வயது 32). இவர் தச்சு வேலைகளை செய்து வருகிறார். சிந்தாதிரிப்பேட்டை, தேவராஜ் தெருவில் வசித்து வருபவர் சாந்தி (வயது 27). கடந்த 2021ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடைபெற்று முடிந்தது.
குழந்தை இல்லாத ஏக்கம்:
திருமணம் முடிந்த 3 ஆண்டுகளிலேயே குழந்தை இல்லை என்ற ஏக்கம் தம்பதிகளை ஆட்கொண்டுள்ளது. இதனால் கணவன் - மனைவியாக பல மருத்துவமனைகளுக்கு சென்று குழந்தை தொடர்பாக பரிசோதனை செய்துகொண்டுள்ளார். இதனால் பலன் இல்லாததால், சாந்தி மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார்.
மோசமடைந்த பாதிப்பு:
இந்த காரணத்தால் மனநல சிகிச்சைகளும் சாந்தி எடுத்துக்கொண்டுள்ளார். இதனிடையே, கடந்த ஜூலை மாதத்தில் சாந்தியின் தாய் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். குழந்தை இல்லாத ஏக்கம், தாயின் மறைவு என சாந்தி மனநிலை மோசமாக, மாத்திரைகளை சரிவர எடுத்துக்கொள்ளாமல் இருந்து வந்துள்ளார். Courtallam Waterfalls: குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி; சுற்றுலாப் பயணிகள் நீராடி மகிழ்ச்சி..!
தூக்கிட்டு தற்கொலை:
இதனால் சாந்தியின் மனநிலை மோசமாக, கடந்த சில நாட்களுக்கு முன் சிந்தாதரிப்பேட்டையில் இருக்கும் தாய் வீட்டிற்கு வருகை தந்துள்ளார். இதனிடையே, நேற்று முந்தினம் வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வட்டாட்சியர் விசாரணை:
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த சிந்தாதிரிப்பேட்டை காவல்துறையினர், சாந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து 3 ஆண்டுகளே ஆவதால் வட்டாட்சியர் விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.