Breaking: வானிலை: நவ.26 & 27ம் தேதிகளில் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் - இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

தெற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வலுப்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Rain Tamilnadu (Photo Credit: @WeatherRadar_IN X)

நவம்பர் 21, புதுடெல்லி (New Delhi): குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கேரள கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று (21.11.2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்று (Today Weather) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓவியம் மற்றும் சிற்பக் கலைஞரா நீங்கள்? தமிழ்நாடு அரசின் அசத்தல் கண்காட்சி.. கலந்துக்கோங்க., பரிசை வெல்லுங்க.! 

ரெட் அலர்ட் அறிவிப்பு:

இந்நிலையில், நவம்பர் மாதம் 26 மற்றும் 27 ம் தேதிகளில் ஒருசில இடங்களில் மிககனமழைக்கு வாய்ப்புகள் உள்ளது. நவ.25 அன்று ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவ.25 முதல் பருவமழை வலுவடையும் என இந்திய வானிலை (Weather) ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் தெற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, தென்மேற்கு வங்கக்கடலில் 25ம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வங்கக்கடலில் மையம் கொண்டு இருக்கும். இது புயலாகவும் மாற வாய்ப்புள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புயலின் உருவாக்கம், நகர்வுகள் தொடர்பான துல்லிய தகவலை உடனுக்குடன் பெற Windy.com உடன் இணைந்திருங்கள்.