நவம்பர் 21, தலைமை செயலகம் (Chennai News): தமிழ்நாடு அரசின் சார்பில், மாநில அளவிலான ஓவியம் மற்றும் சிற்பக் கண்காட்சி போட்டி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் 10 சிறந்த கலையாசிரியர்களுக்கும், நூலாசிரியர்களுக்கும் பரிசுகள், பாராட்டுகள் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்படும். அதன்படி, ஓவிய கண்காட்சிக்காக மொத்தமாக ரூபாய் 8 லட்சம் பரிசுத்தொகை செலவிடப்படுகிறது. மரபு வழி / நவீன பாணி ஆகிய இரு பிரிவுகளிலும் 36 வயதுக்குட்பட்ட 15 மூத்த கலைஞர்களுக்கு தலா ரூபாய் 20,000 வீதம் பரிசு வழங்கப்படும். 35 வயதுக்கு குறைந்த 10 இளங் கலைஞர்களுக்கு தலா ரூபாய் பத்தாயிரம் என மொத்தமாக 50 கலைஞர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. Astrology: திருமணத்திற்கு நாள் பார்க்கப் போறீங்களா? தவிர்க்க வேண்டிய திருமண தேதிகள் என்னென்ன? விபரம் உள்ளே..!
விண்ணப்பம் அனுப்ப இறுதி வாய்ப்பு:
கலையாசிரியர் அல்லது கலை நூலாசிரியர் 20 பேருக்கு தலா ரூபாய் பத்தாயிரம் விதம், 2 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும். இதற்காக விண்ணப்பிக்க பாஸ்போர்ட் சைஸ் அளவுள்ள புகைப்படத்துடன், தனி விபரக் குறிப்பு, படைப்புகள் ஆகியவற்றுடன் டிசம்பர் 06, 2024 தேதிக்குள் விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும்.
தபால் முகவரி:
இயக்குனர்,
கலைப் பண்பாட்டுத்துறை,
தமிழ் வளர்ச்சிக் கழகம், இரண்டாம் தளம்,
எழும்பூர் - சென்னை 600002 என்ற முகவரிக்கு தபால் அனுப்ப வேண்டும். Teacher Stabbed To Death: வகுப்பறையில் ஆசிரியை கத்தியால் குத்திக்கொலை.. வாலிபர் வெறிச்செயல்..!
ஆன்லைனில் விண்ணப்பிக்க:
இதற்கான விண்ணப்பத்தை www.artandculture.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். இந்த பரிசுகள் தமிழ்நாடு மாநிலத்தவருக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓவிய கண்காட்சி தொடர்பாக தமிழக அரசின் அறிவிப்பு:
தமிழ் நாட்டினைச் சேர்ந்த ஓவியர்கள் சிற்பிகள் விண்ணப்பிக்கலாம் @CMOTamilnadu @mkstalin @Udhaystalin @mp_saminathan #TNDIPR #TNMediahub #CMMKStalin #DyCMUdhay #TNGovt #PeoplesGovt #TNGovtSchemes #CMOTamilnadu #peoplecm #TamilNadu pic.twitter.com/dw58aOf452
— TN DIPR (@TNDIPRNEWS) November 20, 2024