Women Protest: பாலியல் தொல்லை கொடுக்கும் மாமனார்; கண்டுகொள்ளாத கணவனால் தர்ணாவில் குதித்த இளம்பெண்..!
திருமணமாகி குழந்தை பிறந்த பின் மனைவியின் மீது வெறுப்பு கொண்ட கணவன், தனது மனைவிக்கு நடக்கும் அநீதியை தட்டிக்கேட்காது செயல்பட்ட சோகம் நெஞ்சை பதறவைத்துள்ளது.
மே 13, போச்சம்பள்ளி (Krishnagiri News): கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி, ஜின்கல்கதிரம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் விக்னேஸ்வரி (வயது 28). இவரின் கணவர் திருப்பதி (வயது 32). இவர் விவசாயியாக வாழ்ந்து வருகிறார். திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகின்றன.
தம்பதிகளுக்கு 4 வயதுடைய நிதர்ஷனா என்ற மகள் இருக்கிறார். கடந்த சில மாதமாகவே விக்னேஸ்வரியின் மாமனார் பெருமாள், தனது மருமகள் விக்னேஸ்வரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரியவருகிறது. Kirni Fruit: பார்வைக்கோளாறு, சிகிரெட்டால் ஏற்படும் பிரச்சனை உட்பட பல வியாதிகளுக்கு மருந்தாகும் கிவி பழம்.!
இந்த விஷயத்தை கணவரிடம் தெரிவிக்கையில், அவர் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். இதனால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட, நேற்று மாலை நேரத்தில் தனது மனைவியை வீட்டில் இருந்து கணவர் வெளியேற்றி இருக்கிறார்.
இதுகுறித்து போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் பலனில்லை. இதனால் விக்னேஸ்வரி தனது மகள் நிதர்ஷனாவோடு தர்ணாவில் ஈடுபட்டு இருக்கின்றார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.