Madurai Crime: 17 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தையை ரூ.8 இலட்சத்திற்கு விற்ற 5 பேர் கைது.. செவிலியர், வழக்கறிஞருக்கு வலைவீச்சு..!

செவிலியர், வழக்கறிஞர் உட்பட 8 பேர் கும்பலின் முயற்சியால், தவறான உறவினால் சிறுமிக்கு பிறந்த குழந்தையை ரூ.8 இலட்சம் பணத்திற்கு விற்பனை செய்த பயங்கரம் நடந்துள்ளது.

Accuse Visuals (Photo Credit: Facebook)

ஆகஸ்ட் 30, மதுரை (Madurai News): மதுரை மாவட்டத்தில் உள்ள பேரையூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி இருக்கிறது. சிறுமியுடன் தவறான தொடர்பில் இருந்த இளைஞரால் அவர் கர்ப்பமாகி இருக்கிறார்.

இந்நிலையில், சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டு ஆண் குழந்தை பிறக்கவே, உடல்நலம் குன்றி சிறுமி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார். மருத்துவமனையில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது. Sep 2023 Launching Mobiles: செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ள ஸ்மார்ட்போன்கள் என்னென்ன?.. நீங்கள் எதிர்பார்த்த அட்டகாசமான தகவல் இதோ.! 

இதனிடையே, சிறுமி தனது தாயார் மற்றும் குழந்தையுடன் பேரையூர் சென்றதாக தெரியவருகிறது. அங்கு சந்தேகமடைந்த செவிலியர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

காவலர்கள் சிறுமி மற்றும் அவரின் தாயிடம் குழந்தை குறித்து கேட்க, அவர்கள் மழுப்பலாக பதில் அளித்துள்ளனர். சந்தேகமடைந்த அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், குழந்தை ரூ.8 இலட்சத்திற்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து, குழந்தையை விலைக்கு வாங்கிய தேஜேஸ்வரி, ஸ்ரீனிவாஸ், சுந்தரன், கார்த்திகேயன், மாரியம்மாள் ஆகிய 5 பேரை கைது செய்த அதிகாரிகள், செவிலியர் மற்றும் வழக்கறிஞரை தேடி வருகின்றனர்.