Loan Interest Women Killed: உப்பு தின்ற வீட்டிற்கு துரோகம் செய்த பயங்கரம்.. வரம்கொடுத்த முதலாளியின் கழுத்தை நெரித்து கொன்ற கூலிப்படை.. உசிலம்பட்டியில் பயங்கரம்.!
கடனுக்கு வட்டியை வாங்கி கொடுக்கும் வேலை செய்து வந்தவர், காலப்போக்கில் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தனக்கு பணம் கொடுத்து உதவிய மூதாட்டியை கூலிப்படை ஏவி கொன்ற பயங்கரம் மதுரையை அதிரவைத்துள்ளது.
பிப்ரவரி 21, உசிலம்பட்டி: மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி (Usilampatti, Madurai), உத்தப்பநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது 60). இவரது கணவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை எய்தினார். செல்லம்மாளின் மகன் மற்றும் மகள் திருமணம் முடிந்து வெளியூரில் இருக்கின்றனர். இதனால் ஊருக்கு ஒதுக்கப்புறமான தோட்டத்து வீட்டில் மூதாட்டி தனியாக வசித்து வருகிறார்.
கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி அவர் வீட்டில் மர்மமான (Death Mystery) முறையில் இறந்து கிடந்த நிலையில், இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த உத்தப்பநாயக்கனூர் காவல்துறையினர் (Uthappanaickanoor Police Station) விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், செல்லம்மாள் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது உடற்கூராய்வில் உறுதியாகவே, இதனை கொலை வழக்காக மாற்றிய காவல்துறையினர் விசாரணையை துரிதப்படுத்தினர்.
மேலும், கொலை நடந்த அன்றைய நாளில் சம்பவ இடத்தில் பதிவான செல்போன் (Mobile Incoming Calls) அழைப்புகள் மற்றும் சிசிடிவி (CCTV Footages) காட்சிகள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தனர். இதற்கிடையில், அப்பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் கிராம நிர்வாக அலுவலரிடம் மூதாட்டி செல்லம்மாளை கொலை செய்ததாக கூறி சரணடைந்தார்.
அவரை கைது செய்து காவல்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகின. செல்லம்மாள் வட்டி தொழில் செய்து வந்த நிலையில், குணசேகரனை அடியாளாக பயன்படுத்தி இருக்கிறார். குணசேகரன் கொடுத்த வேலையை தொடக்கத்தில் சரியாக செய்து கொடுத்ததால், அவரின் மீது நம்பிக்கை வந்து தனது பணம் மொத்தத்தையும் செல்லம்மாள் கொடுத்துள்ளார். Annamalai Vs Udhayanidhi Stalin: உதயநிதி ஸ்டாலினின் செங்கல் பார்முலாவை திருப்பிபிடித்த அண்ணாமலை.. பார்சல் அனுப்புவதாக பரபரப்பு பேச்சு.. முழு விபரம் உள்ளே..!
அதனை வட்டிக்கு விட்டு சம்பாதித்து கிடைத்த பணத்தில் தனக்கான ஊதியம்போக மீத தொகையை செல்லம்மாளிடம் தொடக்கத்தில் வழங்கிய குணசேகரன், காலப்போக்கில் முதலாளியாக மாறும் எண்ணத்திற்கு வந்துள்ளார். கிடைத்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ பழகியுள்ளார். இதனிடையே, செல்லம்மாளின் மகளுக்கு அவசரமாக சமீபத்தில் ஐந்து லட்சம் ரூபாய் தேவைப்பட, அதனை குணசேகரனிடம் கேட்டுள்ளார். அவர் பணம் வழங்க காலதாமதம் செய்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட மனக்கசப்பில் செல்லாமல் மொத்த கணக்கையும் தந்து முடித்துக் கொள்ளுமாறும், தனது வட்டித் தொழிலை பேரனிடம் ஒப்படைக்கிறேன் என்றும் கூறியுள்ளார். மூதாட்டியின் முடிவால் தனக்கு கிடைக்கும் வருமானம் பாதிக்கப்படும் என்று எண்ணிய குணசேகரன், செல்லம்மாளை கொலை செய்துவிட முடிவெடுத்து கரூரில் மரப்பட்டை நடத்தி வந்த உத்தப்பநாயக்கனூரை சேர்ந்த சுந்தர் என்பவருக்கு ரூபாய் ஒன்றரை இலட்சம் பணம் கொடுத்து கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளார்.
சுந்தர் தனது கடையில் வேலை பார்த்து வரும் மாரிமுத்து, விக்னேஷ், சதீஷ் உட்பட நான்குக்கு மேற்பட்டவர்களுடன் சென்று, தனியாக இருந்த செல்லம்மாளின் வீட்டிற்குள் நுழைந்து சேலையால் கழுத்தை நெரித்து கொலை செய்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். உண்மை விபரங்களை கண்டறிந்த காவல் துறையினர் விக்னேஷ் மற்றும் மாரிமுத்து, குணசேகரன் ஆகியோரை கைது செய்தனர். சுந்தர், சதீஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.