Nagapattinam: பேரனுக்கு ரூ.30 கோடி சொத்தை எழுதிவைத்த பெற்றோர்: தாய்-தந்தையின் நிம்மதியை சீர்குலைக்கும் மகள்.!
பெற்றெடுத்த 3 பிள்ளைகளில் ஒருவரின் குழந்தையின் பெயரில் சொத்துக்களை மாற்றியதால், கடைக்குட்டி மகள் தாய்-தந்தையின் நிம்மதியை சீர்குலைக்கும் சம்பவம் அம்பலமாகியுள்ளது.
அக்டோபர் 11, தலைஞாயிறு (Nagapattinam News): நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தலைஞாயிறு (Thalainayar, Nagapattinam), கோவில்பத்து, கீழ்க்காடு கிராமத்தில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன் (வயது 80). இவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆவார். இவரின் மனைவி ஆண்டாள் (வயது 75).
தம்பதிகளுக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். அனைவர்க்கும் திருமணம் முடிந்து, தங்களின் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். தம்பதிகள் தனியே தங்களின் வீட்டில் வசித்து வரும் நிலையில், மூன்றாவது மகள் சாந்தி, அவரின் கணவர் செந்தில் தம்பதியின் சொத்துக்களை கேட்டு மிரட்டி வந்துள்ளனர். Excessive Minerals Affects Kidney: அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.! அறிந்து உண்போம்.! சிறுநீரகம் காப்போம்.!
வயோதிக தம்பதிகள் இருவரும் வசித்து வரும் வீட்டினை, தங்களின் பெயருக்கு மாற்றித்தரக்கூறி சாந்தி மற்றும் செந்தில் அனுதினமும் தொந்தரவு செய்து, தாக்குதல் நடத்தி வந்துள்ளனர். இதனால் தங்களை காப்பாற்றக்கூறி நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் தர்ணா போராட்டமும் நடத்தினர்.
விசாரணையில், வயோதிக தம்பதியின் மருமகன் கிருஷ்ணமூர்த்தி. அவரின் மகன் அறிவழகன். இவரின் பெயரில் வயோதிக தம்பதி ரூ.30 கோடி மதிப்பிலான சொத்துக்களை உயில் எழுதி வைத்துள்ளனர். இதனால் சொத்து பறிபோன ஆத்திரத்தில் சாந்தி - செந்தில் தம்பதி மிரட்டி வந்துள்ளனர்.
இவர்களின் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.