Nellai Iruttukadai: இருட்டுக்கடை உரிமையாளரின் மகள் வரதட்சனை புகார்.. எதிர்ப்பு தெரிவித்த மாப்பிள்ளை..! நடந்தது என்ன..?

நெல்லை இருட்டுக்கடை உரிமையாளரின் மகள் தனது கணவர் மீது வரதட்சணை புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nellai Iruttukadai Issue (Photo Credit: YouTube)

ஏப்ரல் 16, நெல்லை (Tirunelveli News): திருநெல்வேலியில், கடந்த 1940ஆம் ஆண்டு ராஜஸ்தானைச் சேர்ந்த பிஜிலி சிங் என்பவரால் 'இருட்டு கடை' (Iruttukadai) தொடங்கப்பட்டது. தற்போது, மூன்றாம் தலைமுறை வாரிசுகளால் இன்றும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இருட்டு கடை உரிமையாளர் கவிதாவின் மகள் கனிஷ்காவிற்கு, கடந்த பிப்ரவரி மாதம் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் பல்ராம் சிங் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி 40 நாட்களே ஆன நிலையில், கனிஷ்காவிற்கு கணவர் பல்ராம் சிங் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொல்லை கொடுத்ததாக அவர் தற்போது குற்றம் சாட்டியுள்ளார். College Student Dies By Suicide: திருட்டுப் பழி சுமத்திய நிர்வாகம்.. மனமுடைந்த மாணவி விபரீத முடிவு..!

இருட்டு கடை உரிமையாளர் மகள் பரபரப்பு புகார்:

இதுகுறித்து, நெல்லை மாநகராட்சி காவல் ஆணையரிடம் கனிஷ்கா, அவரது தாய் கவிதாவுடன் புகாரளித்தார். அவர் அளித்த புகாரில், புகழ்பெற்ற இருட்டு கடையை தனது பெயருக்கு எழுதி தரச் சொல்லி, கணவர் பல்ராம் சிங் மிரட்டியதாகவும், அதற்கு அவரது குடும்பத்தினர் உடந்தையாக இருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும், சம்பவம் தொடர்பாக குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தினால் கொன்று விடுவேன் என மிரட்டல் விடுத்தார். இந்த புகார் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது கனிஷ்காவின் கணவரும், மாமனாரும் இதுகுறித்து விளக்கமளித்துள்ளனர்.

பொய் குற்றச்சாட்டு:

அவர்கள் கூறுகையில், இருட்டு கடையை நாங்கள் வரதட்சனையாக (Dowry) கேட்கவில்லை என்றும், அவர்கள் பெயருக்கே இருட்டு கடை தற்போதுதான் வந்தது என்றும் தெரிவித்தார். இருட்டு கடையின் முந்தைய உரிமையாளர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக உறவினர்களே குற்றம்சாட்டியதாக கூறிய அவர், இருட்டு கடை முறைகேடாக எழுதிவாங்கப்பட்டது வெளியில் தெரிந்துவிடுமோ என்ற அச்சத்தால் பொய் குற்றச்சாட்டை வைப்பதாக தெரிவித்தார். மேலும், குற்றம்சாட்டப்பட்ட அந்த கார், கனிஷ்காவின் பெயரில் தான் உள்ளதாக கூறினார். ஒரு ரூபாய் கூட வரதட்சனையாக வாங்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement