TN Weather Update: காலை 10 மணிவரையில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

விழுப்புரம், காஞ்சி, தர்மபுரி உட்பட 6 மாவட்டங்களில் காலை 10 மணிவரையில் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Trichy Rains File Pic (Photo Credit: @ANI X)

ஆகஸ்ட் 09, சென்னை (Chennai News): தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்கு திசைக்காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழைக்கான வாய்ப்புகள் உள்ளது என மண்டல வானிலை ஆய்வு மையம் தனது நாளைய வானிலை (Tomorrow Weather) செய்திக்குறிப்பில் தகவல் தெரிவித்து இருந்தது. TN Weather Update: 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. நாளைய வானிலை குறித்த அப்டேட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

சூறாவளிக்காற்று எச்சரிக்கை:

அதேபோல, மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல்ப்பகுதிகள், வடதமிழக கடலோரப்பகுதி, மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

காலை 10 மணிவரையில் மழை:

இந்நிலையில், இன்று காலை 10 மணிவரையில் தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை , காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புகள் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி, திருத்தணி, கலவை ஆகிய பகுதிகளுக்கும் மழைக்கான எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.