Weather Update: அரபிக்கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... கனமழை அலெர்ட்!

தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Rains Cloud (Photo Credit: Wikipedia)

டிசம்பர் 14, சென்னை (Chennai): தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் 17ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் (Regional Meteorological Centre) தகவல் தெரிவித்துள்ளது.

கனமழை அலெர்ட்: மேலும் அரபிக்கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி லேசாக வலிமை அடைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் டிசம்பர் 16 மற்றும் 17ஆம் தேதி அநேக இடங்களில் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். Ra Sankaran Death: பிரபல இயக்குநர் ரா.சங்கரன் திடீர் மரணம்... சோகத்தில் மூழ்கிய திரைத்துறை..!

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் டிசம்பர் 15, 16, மற்றும் 17 தேதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது‌.