TN Govt Jobs: 10 வகுப்பு போதும்.. சத்துணவு துறையில் காலிப்பணியிடங்கள்; 8,997 பேருக்கு வேலைவாய்ப்பு.!
சத்துணவு துறையில் இவ்வாய்ப்பு வழங்கப்படுகிறது.
டிசம்பர் 20, தலைமை செயலகம் (Chennai News): கடந்த 1982ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் சத்துணவு திட்டம் அமல்படுத்தப்பட்டு, பள்ளிகளுக்கு வரும் மாணவ - மாணவியரின் எண்ணிக்கையை அதிகரிப்பது, வருகையை தக்கவைப்பது, குழந்தைகளின் ஊட்டச்சத்துக்களை மேம்படுத்துவது, பசியில்லாத தமிழகத்தை உருவாக்குவது போன்ற உன்னத நோக்கத்துடன் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி, அவர்களுக்கு அதிகாரம் வழங்குவதையும் உறுதி செய்ய தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. Husband Kills by Wife: மதுவில் சயனைடு கலந்து கணவர் கொலை; கள்ளக்காதல் உறவால் மனைவியின் விபரீத செயல்.! விழுப்புரத்தில் அதிர்ச்சி.!
சத்துணவு சமையல் உதவியாளர் பணி விபரங்கள்:
இந்நிலையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் (Sathunavu Amaipalar Recruitment 2024 - 2025) கீழ் 8,997 சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான அனுமதியை சமூக நலன் & மகளிர் உரிமைத்துறை வழங்கி இருக்கிறது. இதன் வாயிலாக பல்வேறு மாவட்டங்களில் காலியாக இருக்கும் சத்துணவு சமையல் உதவியாளருக்கான காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளன. இந்த வேலைக்கான கல்வித்தகுதி 10 ம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி ஆகும். மாதம் ரூ.3,000/- தொகுப்பூதியமாகவும், 12 மாதம் சிறப்பாக பணிகளை செய்யும் நபருக்கு சிறப்பு காலமுறை ஊதியமும் வழங்கப்படும். அரசு அறிவிப்பு மட்டுமே தற்போது வெளியாகியுள்ள நிலையில், விண்ணப்பிக்கும் முறை, பிற நடைமுறைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணி நிலை: தற்காலிகம்