School College Leave: 5 மாவட்ட பள்ளி-கல்லூரிகள், 15 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை; கனமழை, வெள்ளத்தால் மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.!

விழுப்புரம், கடலூர், தி.மலை உட்பட 15 மாவட்டங்களில் இன்று கனமழை - வெள்ளம் காரணமாக பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

School, College Holiday due to Rain (Photo Credit: @Sriramrpckanna1 X)

டிசம்பர் 12, சென்னை (Chennai News): வானிலையில் (Weather) தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று (டிச.11ம் தேதி) காலை 8.30 மணி அளவில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இவை மேற்கு-வடமேற்கு திசையில் இலங்கை - தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து கொண்டே வருகிறது.

இன்றைய வானிலை (Today Weather):

இதன்காரணமாக இன்று (டிச.12) தமிழகத்தில் 27 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். அதன்படி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. College Girls Dies By Suicide: கல்லூரி மாணவிகள் இருவர் தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை (School College Holiday) அறிவிப்பு:

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் இன்று (டிசம்பர் 13) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், திண்டுக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 5ஆம் வகுப்பு வரை மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புயலின் நகர்வுகளை நேரலையில் காண: