Bomb Threat: சென்னை தலைமை செயலகம், தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; பாதுகாப்பு பணிகள் தீவிரம்.!
பட்டினப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிக்கு 09வது முறையாக மின்னஞ்சலில் வெடிகுண்டு விடுக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
ஆகஸ்ட் 06, பட்டினப்பாக்கம் (Chennai News): சென்னையில் உள்ள பட்டினப்பாக்கம் பகுதியில் செட்டிநாடு வித்யாஸ்ரமம் பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பள்ளிக்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து, பட்டினப்பாக்கம் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தியதில், அது போலியான மிரட்டல் என்பது அம்பலமானது. இந்த விஷயம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். Coutrallam Waterfalls: குற்றாலம் அருவிகளில் திடீர் நீர்வரத்து அதிகரிப்பு; சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை.!
மின்னஞ்சலில் மிரட்டல்:
இதனிடையே, தற்போது வரை 9 முறை தொடர்ந்து அதே பள்ளிக்கு மின்னஞ்சலில் மிரட்டல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்று ஒன்பதாவது முறையாக மிரட்டல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அது சங்கர் ஜிவால் ஐபிஎஸ் பெயரில் போலியான மின்னஞ்சல் கொண்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் குறித்து காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பணிகள் தீவிரம்:
இந்நிலையில், பட்டினப்பாக்கம் செட்டிநாடு பள்ளி மட்டுமல்லாது, மடிப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி, மவுண்ட் இராணுவ பள்ளிக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல, சென்னை தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த விஷயம் தொடர்பாக பட்டினப்பாக்கம் காவல்துறையினர் மற்றும் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளிகள் மற்றும் தலைமை செயலகத்தில் பாதுகாப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ள்ளது.