ஆகஸ்ட் 06, குற்றாலம் (Tenkasi News): தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் (Coutrallam) பகுதியில் இருக்கும் மெயின் அருவி, ஐந்தருவி சுற்றுலாத்தலங்களில், மழைக்காலங்களில் நல்ல நீர்வரத்து இருக்கும். மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் தென்மேற்கு பருவமழை காரணமாக தற்போது குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து என்பது தொடர்ந்து காணப்படுகிறது. இதனால் சுற்றுலாப்பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் அருவிகளில் நீராடி மகிழ்ந்து வருகின்றனர். Melmaruvathur Adhiparasakthi Temple: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் ஆடிப்பூர திருவிழா; இன்று செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.!
திடீரென அதிகரித்த நீர்வரத்து:
அவ்வப்போது மலைப்பகுதிகளில் ஏற்படும் மழைப்பொழிவின் காரணமாக குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிக்கும். அப்போது, மக்களின் பாதுகாப்பு கருதி அருவிகளில் நீராட தடை விதிக்கப்படும். அந்த வகையில், நேற்று வரை குற்றாலம் அருவிகளில் மக்கள் குளிக்க தடை தடையில்லாமல் இருந்த நிலையில், அருவிகளில் மக்கள் குளித்துக்கொண்டு இருந்தபோதே திடீரென நீர் வரத்து அதிகரித்தது. இதனால் உடனடியாக அபாய ஒலி எழுப்பப்பட்டு அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் ஐந்தருவி, மெயின் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்:
கடந்த சில மாதங்களுக்கு முன்பு குற்றாலம் பழைய அருவியில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 17 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், கண்காணிப்பு பணிகள் தீவிரப்பப்பட்டு இருக்கின்றன. நேற்று முன்தினம் தென்காசி மாவட்ட ஆட்சியரும் குற்றாலம் அருவிகள் நீர்வரத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக நேரில் சென்று ஆய்வு நடத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.