Vijay Yesudas: பிரபல பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸின் வீட்டில் 60 சவரன் நகைகள் திருட்டு.. காவல் நிலையத்தில் அதிர்ச்சி புகார்.!!
ரஜினிகாந்தின் மகள் வீட்டில் பணிப்பெண் திருடி பல ஆண்டுகள் கழித்து சிக்கிக்கொண்ட சம்பவம் நடைபெற்ற நிலையில், தற்போது பாடகர் வீட்டிலும் பணியாட்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 31, அபிராமபுரம் (Cinema News): சென்னையில் உள்ள அபிராமபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் திரைப்பட பாடகர் விஜய் யேசுதாஸ் (Singer Vijay Yesudas) வசித்து வருகிறார். இவர் தனது மனைவி தக்ஷணா (Dakshana) பாலாவுடன் வசித்து வருகிறார். இவர் திரைப்பட பின்னணி பாடகர் மட்டுமல்லாது திரைப்பட நடிகரும் ஆவார்.
தனுஷின் நடிப்பில் கடந்த 2015 ம் ஆண்டு வெளியான மாரி (Maari Tamil Movie) திரைப்படத்தில் காவல் அதிகாரி வேடமேற்று நடித்திருந்தார். இவர் தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார். அவரின் மனைவி சென்னையில் இருக்கிறார். MS DhonI Practice: பிட்ஸில் தீவிர பயிற்சியில் தல தோனி.. வைரலாகும் அசத்தல் கிளிக்ஸ்..! எல்லா கோப்பையும் சிங்கங்களோடது..!
இந்த நிலையில், நடிகர் விஜய் யேசுதாஸின் (SInger Vijay Yesudas Jewels Theft) வீட்டில் இருந்த 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் மாயமாகியுள்ளன. இதனால் வீட்டில் பணியாற்றுவோரின் மீது சந்தேகம் இருப்பதாக தர்க்ஷனா அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் (Aishwarya Rajinikanth) வீட்டில் பணியாற்றி வந்த பணிப்பெண் நகைகளை திருடி சொந்தமாக அபார்ட்மெண்ட் பில்டிங் வாங்கிய விவகாரம் அம்பலமான நிலையில், இதுகுறித்த தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.