MK Stalin: ராகுல் காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல்; "பாதுகாப்பை பலப்படுத்துக" தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை.!

"உங்களின் பாட்டிக்கு நேர்ந்ததை போல உங்களுக்கு நேரும்" என ராகுல் காந்திக்கு நேரடி மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதால், அவருக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மத்திய அரசை வலியுறுத்தி இருக்கிறார்.

MK Stalin | Rahul Gandhi (Photo Credit: @MKStalin / @RahulGandhi X)

செப்டம்பர் 18, சென்னை (Chennai News): 2024 மக்களவை தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அடைந்த பாஜக, தனது கூட்டணி ஆட்சியை மத்தியில் அமைத்துள்ளது. கடந்த 2019 தேர்தலை போல அல்லாமல், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றியது. தொடர்ந்து 2029 மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு, காங்கிரஸ் தலைமை தற்போதில் இருந்து செயலாற்றி வருகிறது. இந்தியா கூட்டணியின் (INDI Alliance) மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi) அமெரிக்காவுக்கு தனிப்பட்ட முறையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அங்கு இந்தியர்களுடன் அவர் தொடர்ந்து உரையாற்றி வருகிறார். தனது தனிப்பட்ட தகவலையும் இந்தியர்களுடன் பகிர்ந்து வரும் நிலையில், இந்தியாவில் அவருக்கு பாஜக மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள் சார்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. Tiruvannamalai: புரட்டாசி பௌர்ணமி திருவண்ணாமலை கிரிவலம்.. போதிய பேருந்துகள் இல்லாததால் பக்தர்கள் சாலை மறியல்.! 

ராகுல் காந்திக்கு பகிரங்க மிரட்டல்:

சமீபத்தில், மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியின் ஆதரவாளர்கள் சிலர், ராகுல் காந்தியை தொடர்ந்து மிரட்டும் வகையில் வன்முறை கருத்தை பதிவிட்டு வந்தனர். மேலும், ஒருகட்டத்தில் உங்களின் பாட்டிக்கு நேர்ந்ததைப்போல, உங்களுக்கும் நேரலாம். ராகுலின் நாக்கை அறுப்போருக்கு சன்மானம் வழங்கப்படும் என நேரடி மிரட்டல் வகையில் தங்களின் சர்ச்சை கருத்துக்களை ராகுல் காந்திக்கு எதிராக முன்வைத்தனர். ஷிண்டே சிவசேனா அணியின் எம்.எல்.ஏ-வும் இந்த தகவலை தெரிவித்ததால் சர்ச்சை ஏற்பட்டது.

மத்திய அரசுக்கு மு.க ஸ்டாலின் கோரிக்கை:

இதனால் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், மத்திய அரசுக்கு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினின் எக்ஸ் பதிவில், "எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்திக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பை மத்திய அரசு பலப்படுத்த வேண்டும். ராகுல் காந்தியின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரின் நாக்கை இருப்பேன், கொலை செய்வேன் என மிரட்டுவது கண்டிக்கத்தக்கது. ராகுலின் அரசியல் முன்னெடுப்பு, அதிகரிக்கும் மக்கள் ஆதரவு சிலருக்கு கலக்கம் தந்துள்ளது. இதனாலேயே எதிர்ப்பு கருத்துக்கள் வருகின்றன. மத்திய அரசுக்கு அவருக்கான பாதுகாப்பை வழங்கிட வேண்டும்" என கூறியுள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், ராகுல் காந்திக்கு மத்திய அரசு பாதுகாப்பு வழங்க வேண்டி வைத்த கோரிக்கை: