Happy Tamil New Year: தமிழர்கள் சிறப்பிக்கும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்.. இன்றைய நாளுக்கான வாழ்த்து செய்தி இதோ.!
பண்டைய இந்தியாவில் பெரும்பகுதியையும், கடல்கடந்து பல நாடுகளை தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்து, சீனா, ரோமானியா போன்ற பல நாடுகளுடன் வணிக ரீதியிலான உறவை பல நூற்றாண்டுகள் முன்பே வைத்திருந்த தமிழ் குடிமக்களுக்கு இன்று உற்சாகத்தை தரும் தமிழ் புத்தாண்டு நாள்.
ஏப்ரல் 14, சென்னை (Chennai): தமிழ் நாட்காட்டியின்படி (Tamil Calendar) சித்திரை மாதத்தின் முதல் நாளான இன்று (Tamil New Year), புத்தாண்டாக சிறப்பிக்கப்படுகிறது. உலகெங்கும் உள்ள தமிழ் மக்களால் இன்றைய நாள் வெகுவிமர்சையாக சிறப்பிக்கப்படும். தமிழ்நாட்டில் தமிழ் பேசும் மக்கள் மட்டுமின்றி, பிற மொழி பேசுவோர் தமிழகத்தில் தமிழர்களாகவே வாழுகிறார்கள்.
தமிழ் மொழியின் இலக்கண நடைகளை உணர்ந்த போர்ச்சுகீசியர்கள், பிரெஞ்சுக்காரர்கள் என தமிழுக்காக தொண்டாற்றிய பலரும் இன்று வரை தமிழ் புலவர்களாகவே அறியப்பட்டு இருக்கிறார்கள்.
உலகின் மூத்த மொழி, உலகின் மூத்த குடி என போற்றுதலுக்குரிய தமிழ் இனத்தின் புத்தாண்டு நாளான இன்று குடும்பத்தினர், நண்பர்களுடன் கொண்டாட்டங்கள் இருக்கும். பல கோவில்களில் சாமி சிறப்பு தரிசனமும் நடைபெறும். இன்றைய நாளுக்கான வாழ்த்து செய்திகள் என்பது பல இருக்கின்றன. Best Air Coolers: வெதும்பவைக்கும் வெயிலை சமாளிக்க எந்த ஏர் கூலர் வாங்கலாம் என யோசனையா?.. அசத்தல் டிப்ஸ் உங்களுக்காக..!
புலம்பெயர்ந்து தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா, மொரிஷியஸ் போன்ற நாடுகளிலும் இன்றைய நாளை தமிழர்கள் தங்களது குடும்பத்துடன் சிறப்பித்து மகிழுவார்கள்.
👉 ஒருவேளை இந்தப் புத்தாண்டு உங்கள் கனவுகள் அனைத்தையும் நிறைவேற்றும் ஒன்றாக இருக்கப் போகிறது, எனவே அதை மகிழ்ச்சியான மனதுடன் தொடங்குங்கள்.
👉 நீங்களும் உங்கள் குடும்பமும் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் செழிப்புடன் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
👉 இந்த புத்தாண்டு உங்கள் கவலைகள் அனைத்தையும் போக்கட்டும். நீங்களும் உங்கள் குடும்பமும் ஆரோக்கியமான மற்றும் வளமான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள்.
👉 இந்த புத்தாண்டு நம்பிக்கையுடனும் உத்வேகத்துடனும் தொடங்கட்டும்.