K Annamalai: அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்; பாஜக அண்ணாமலை கடும் கண்டனம்.!
காதலருடன் தனிமையில் இருந்த கல்லூரி மாணவியை மிரட்டி இருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், சென்னையை அதிரவைத்துள்ளது.
டிசம்பர் 25, கிண்டி (Chennai News): சென்னையில் உள்ள கிண்டி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் (Annamalai University), 19 வயதுடைய இரண்டாம் ஆண்டு பயின்று வரும் கல்லூரி மாணவி (College Student), 2 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி, தனது கல்லூரியில் பயின்று வரும் மாணவருடன் 2 ஆண்டுகளாக காதலில் விழுந்த நிலையில், இருவரும் நேற்று முன்தினம் வழக்கம்போல தனிமையில் சந்தித்துக்கொண்ட சமயத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மேலும், அவரை நிர்வாணப்படுத்தி வீடியோவும் எடுத்து வைத்துள்ளனர்.
வீடியோ எடுத்து மிரட்டல்:
இந்த விஷயம் தொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி வளாகத்திலேயே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இரவு உணவை சாப்பிட்டுவிட்டு, காதல் ஜோடி நடைப்பயிற்சிக்கு வந்துள்ளார். பின் தனிமை இடத்திற்கு சென்றபோது, அதனை இருவர் நோட்டமிட்டு வீடியோ எடுத்துள்ளனர். வீடியோவை காண்பித்து மிரட்டி, மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. நாங்கள் அழைக்கும்போது வரவில்லை என்றால், வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகும் எனவும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மர்ம நபர்கள் இருவருக்கும் அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர். Anna University: காதலனுடன் தனிமை.. கல்லூரி மாணவியை நிர்வாணப்படுத்தி பாலியல் சீண்டல்.. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அதிர்ச்சி.!
சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது - அண்ணாமலை கண்டமும்:
இந்த விஷயம் குறித்து அண்ணாமலையின் எக்ஸ் (ட்விட்டர்) வலைப்பதிவில், "சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள், மாணவி ஒருவருக்குப் பாலியல் தாக்குதல் நடைபெற்றிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்து விட்டது. தினமும் படுகொலைச் சம்பவங்கள், போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரிப்பு, பொதுமக்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர், பெண்கள், குழந்தைகள் என யாருக்கும் பாதுகாப்பில்லாத இருண்ட காலத்தில் இருப்பது போன்ற சூழ்நிலையில் தமிழகம் தற்போது இருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. குறிப்பாக, குற்றவாளிகள் திமுகவினர் என்றால், அவர்கள் மீதான நடவடிக்கை தாமதப்படுத்தப்படுகிறது.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை:
மாநிலத் தலைநகரத்தின் மையப்பகுதியில், பொறியியல் கல்வி தலைமை நிறுவன வளாகத்தின் உள்ளே, பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை இருக்கிறது என்றால், சமூக விரோதிகளுக்கு, அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ எந்த பயமும் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. உடனடியாக, இந்தக் குற்றத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாநகர காவல்துறையும், காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சரும், மாணவி மீதான பாலியல் தாக்குதலுக்கு முழு பொறுப்பேற்று, பொதுமக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.